Home /News /trend /

தன்னை வளர்த்த பெண்மணியின் உயிரைக் காப்பாற்றி ‘சூப்பர் ஹீரோவாக’ மாறிய பூனை! 

தன்னை வளர்த்த பெண்மணியின் உயிரைக் காப்பாற்றி ‘சூப்பர் ஹீரோவாக’ மாறிய பூனை! 

உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ பூனை

உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ பூனை

Superhero Cat Viral Video | மாரடைப்பால் உயிருக்கு போராடிய உரிமையாளரை அவர் செல்லமாக வளர்ந்த பூனை காப்பாற்றியுள்ள சம்பவம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • INTER, Indiaenglandenglandenglandenglandengland
    மாரடைப்பால் உயிருக்கு போராடிய உரிமையாளரை அவர் செல்லமாக வளர்ந்த பூனை காப்பாற்றியுள்ள சம்பவம் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

    உரிமையாளர்கள் உயிருக்கு ஆபத்தான சந்தர்பத்தில் சிக்கும் போது தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நாய்கள் பற்றிய நிறைய வீடியோக்கள் இணையத்தில் ஏராளம் உண்டு. நீரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, விபத்தில் சிக்கிய உரிமையாளரை காப்பாற்ற உதவுவது  என நாய்கள் பல சந்தர்பங்களில் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளது.

    தற்போது பூனை ஒன்று தன்னை வளர்த்தவரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம் பகுதியைச் சேர்ந்த சாம் ஃபெல்ஸ்டெட் என்ற 42 வயதான பெண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது அவர் வளர்த்து வரும் செல்லப்பிராணியான ஏழு வயது பூனை பில்லி அதிகாலை 4.30 மணியளவில் அவரை எழுப்ப முயன்றுள்ளது.

    தனது பூனைக்குட்டியை கண் திறந்த பார்த்த சாம், சிறிது நேரத்திலேயே நிலைகுலைய ஆரம்பித்தார். படுக்கையை விட்டு எழுந்திருக்க முயன்றவரால் உடலை அசைக்க கூட முடியவில்லை, அதே சமயம் மார்பின் வலது பக்கத்தில் சுளீர் என்ற தாங்க முடியாத வலியும் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சமயத்தில், அவரது பூனைக்குட்டியான பில்லி, மார்பின் மீது தனது கால்களை வைத்து அழுத்தியதால் தான் பிழைத்ததாக சாம் நம்புகிறார். உடனே தனது தாய்க்கு சாம் போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அவரது அம்மா உடனடியாக வீட்டுக்கு வந்து மகளை நாட்டிங்ஹாம் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Read More : அயர்ந்து தூங்கியதால் இறங்கு பாதையை தவற விட்ட விமானிகள்... அடுத்து நடந்தது?


    அங்கு சாமை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்கள் சொன்னதைக் கேட்ட சாம், அன்று என்ன நடந்தது என்பதை தெளிவாக நினைவுகூர்ந்துள்ளார். வலியால் துடித்துக்கொண்டிருந்த தன்னை பூனைக்குட்டி பில்லி தான் காப்பாற்றியதாக நம்புகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அன்று படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். திடீரென வியர்த்து கொட்டியது. வலியை உணர முடிந்தது. சிறிது நேரம் கழித்து நான் கண் விழித்து பார்த்த போது பில்லி என் மார்பின் மேல் அமர்ந்திருந்தது. என் காதுக்கு அருகே வந்து சத்தமாக கத்தி கொண்டிருந்தான். வழக்கமாக நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது பில்லி இதுமாதிரி எல்லாம் நொந்தரவு செய்தது கிடையாது.

    இரவு, பகல் பார்க்காமல் தூங்கி கொண்டே தான் இருக்கும். ஆனால் முதல் முறையாக இப்படி நடந்து கொண்டது, அது தான் என் உயிரைக் காப்பாற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஊடகங்கள் மூலமாக பரவியதை அடுத்து பூனைக்குட்டி பில்லியை ‘சூப்பர் ஹீரோ கேட்’ என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral, Viral Videos

    அடுத்த செய்தி