தினமும் ஈரத்துடன் வீடு திரும்பும் பூனை - காரணத்தை விளக்கும் வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

தான் வளர்க்கும் பூனையானது தினமும் வீட்டிற்கு ஈரமாக திரும்பும் காராணத்தை பூனையின் உரிமையாளர் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  விலங்குகள் செய்யும் குறும்புத்தனமான செயல்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில், இது போல ஆயிரக்கணக்கான வீடியோக்களை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் ஆன்லைனில் ஏராளமான நபர்களால் விரும்பப்படுகிறது. ஏனெனில் தற்போதைய கடுமையான நாட்களில் கூட மக்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் திறனை இந்த வீடியோக்கள் கொண்டுள்ளன.

  இந்த நிலையில் சமீபத்தில் பூனை ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூனைகள் பெரும்பாலும் மற்ற விலங்குகளுடன் நட்பாக இருக்காது, ஆனால் இந்த வீடியோவில் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்பது உங்களுக்கு தெரியவரும்.

  வரும் 21 வினாடிகள் மட்டுமே உள்ள அந்த வீடியோவில் பூனையுடன், மான் ஒன்று உள்ளது. பூனை வந்தவுடன், அதன் அருகே சென்ற மான் அதனை அழகாக கொஞ்சுகிறது. மேலும் தன் நாக்கால் பூனையின் உடம்பில் தடவுகிறது. இதனை அனுபவிக்கும் பூனை மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. வீடியோவுடன் பகிரப்பட்ட தலைப்பில், இந்த அழகான சம்பவத்தை நாங்கள் காணும் வரை பூனை ஏன் எப்போதும் ஈரமாக வீடு திரும்புகிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அந்த வீடியோவை ஷேர் செய்திருந்த யூசர் குறிப்பிட்டுள்ளார்.

  வீடியோவை இங்கே காணுங்கள் :

  https://www.reddit.com/r/aww/comments/o4ks00/friend_couldnt_figure_out_why_her_foster_cat_kept/?utm_term=1458876096&utm_medium=post_embed&utm_source=embed&utm_name=&utm_content=header

  இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் ஏராளமான நெட்டிசன்கள் தங்கள் எண்ணங்களை கருத்துக்களாக ஷேர் செய்துள்ளனர்.

  ஒரு யூசர், அவருக்கு செல்லப்பிராணியாக ஒரு மான் இருந்ததை நினைவு கூர்ந்துள்ளார். ஒவ்வொரு முறையும் மான், பூனையை பார்க்கும்போது, அதன் அன்பு வெளிப்படுவதாக மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

  மற்றொரு யூசர் இந்த அசாதாரண பிணைப்பை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும், இவர்களது உறவு எப்படி தொடங்கியது? என ஆச்சரியப்பட்டார். “அவர்கள் எப்படி முதலில் நண்பர்களாக ஆனார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மான் பொதுவாக குதித்து கொண்டே இருக்கும், அதனுடன் பூனை எவ்வாறு நட்பு கொண்டது" என கேள்வி எழுப்பியுள்ளார். “என் பூனை ஒவ்வொரு இரவும் என் முகத்தையும் கைகளையும் நக்கி என்னை எழுப்புகிறது" என ஒரு யூசர் குறிப்பிட்டுள்ளார்.

  பூனை - மானுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர். முன்னதாக யானை ஒன்று சட்டை அணிந்து மரக்கிளையை வைத்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதேபோல எண்ணற்ற வீடியோக்கள் நெட்டிசன்களை குதூகலப்படுத்தி வருகிறது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: