முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 'மியாவ்-ஸ்டெர் செஃப்': சுவையான பானங்களை தயார் செய்யும் பூனை - வைரல் வீடியோ!

'மியாவ்-ஸ்டெர் செஃப்': சுவையான பானங்களை தயார் செய்யும் பூனை - வைரல் வீடியோ!

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஒவ்வொரு பானமும் தயாரிக்கப்பட்ட பிறகு, அந்த பானத்துடன் பூனை மியாவ் என்று கூறியவாறு, நாக்கை ருசித்து கொண்டே போஸ் கொடுக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

சமீப காலமாக பல்வேறு குறும்புத்தனமாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் அபிமான வீடியோக்கள் இணையதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. பூனைகள், யானை, நாய் என செல்ல பிராணிகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் சில நொடிகளில் வைரலாகி வருகின்றன. பூனை வீடியோக்களை ஆன்லைனில் மணிக்கணக்கில் பார்ப்பதில் வெறி கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவரா? இந்த செய்தி உங்களுக்குத்தான்.

ஒரு பூனை சமையல்காரராக மாறி பல்வேறு ரெசிபிக்களை தயாரிப்பதன் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த பூனை பானங்கள் உட்பட பல்வேறு சுவையான உணவுகளை தயார் செய்யும் வீடியோக்கள் பார்பவர்களை குதூகலப்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் 'தட் லிட்டில் பஃப்' என்றயூசர், 'மியாவ் செஃப்' குறித்த வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். ஆகஸ்ட் 4 அன்று ஷேர் செய்யப்பட்ட ஒரு வீடியோவில், பூனை பல பானங்களை தயாரிப்பதை காணலாம். மிகவும் அழகாவும், பொறுமையாகவும் அந்த பூனை ஜூஸ்களை தயார் செய்கிறது .




 




View this post on Instagram





 

A post shared by That Little Puff (@thatlittlepuff)



அதுவும் விதவிதமாக தயார் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 'சுவையான யம்மி மியாவ்' என அந்த வீடியோவில் தலைப்பிட்டுள்ளனர். நீங்கள் ஒரு கப் அல்லது குடிக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி கேப்சனில் உள்ளது. இந்த இரண்டு நிமிட வீடியோவில் பூனை கற்றாழை, டிராகன் பழம், சாக்லேட் மற்றும் மாம்பழத்தை நறுக்கி பல்வேறு சுவையான பானங்களை தயாரிக்கிறது. பழங்களை நறுக்கும் போது, பிளெண்டரைப் பயன்படுத்தும் போது பூனையின் பட்டுபோன்ற பாதங்கள் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

மிஸ்டர் மியாவ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு பானமும் தயாரிக்கப்பட்ட பிறகு, அந்த பானத்துடன் பூனை மியாவ் என்று கூறியவாறு, நாக்கை ருசித்து கொண்டே போஸ் கொடுக்கிறது. இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 20,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கானோர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். இந்த பூனையின் திறமையை கண்ட நெட்டிசன்கள் அதன் சமையல் திறன்களால் ஈர்க்கப்படுவது மட்டுமல்லாமல், அந்த பூனையின் அழகைக் கண்டு பிரமிக்கிறார்கள்.




 




View this post on Instagram





 

A post shared by That Little Puff (@thatlittlepuff)



மாட்சா, கற்றாழை, பல்வேறு பழங்கள் போன்றவற்றை மிகவும் நேர்த்தியாக பானங்கள் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் அவற்றை வெட்டுவது, அரைப்பது போன்ற பணிகளையும் பூனையே செய்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், மியாவ் செஃப் ஒரு மாஸ்டர் சமையல் நிபுணர் என்று குறிப்பிட்டுள்ளார். கற்றாழை உண்ணக்கூடியதா அல்லது மாட்சா என்றால் என்ன என்று பலரும் தங்களது சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த பூனை எப்படி கிடைத்தது என்று ஒருவர் கேட்டுள்ளார். மற்றொரு பெண் தனது கணவரும், அவளும் மியாவ் செஃப் வீடியோக்களை விரும்புவதாகவும், தங்கள் நாளை மிகவும் மகிழ்ச்சியானதாக மாற்றியதற்கு நன்றி என்றும் கமெண்ட் செய்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Cat, Instagram, Sugary Drinks, Trending, Viral Video, Warm Drinks