Home /News /trend /

உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூனை ... சிக்ஸ் பேக் வைக்க போராடும் வீடியோ வைரல்

உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூனை ... சிக்ஸ் பேக் வைக்க போராடும் வீடியோ வைரல்

வைரல் 
வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : சீனாவில் உள்ள ஜினிங் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒரு பூனைக்குட்டி சிட்-அப் செய்து அசத்துகிறது.

    உடல் எடையை பராமரிக்கவும் , உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் மனிதர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு ஜிம் செல்வதை கண்டிருப்போம். ஆனால் இங்கு மனிதர்களுக்கே சவால் விடும் அளவிற்கு பூனை ஒன்று உடற்பயிற்சி கூடம் சென்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    சீனாவில் உள்ள ஜினிங் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒரு பூனைக்குட்டி ஒன்று சிட்-அப் செய்து அசத்துகிறது. இந்த வீடியோவை அதன் உரிமையாளர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.



    உடற்பயிற்சி கூடத்தில் சிட்-அப் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் பூனைக்கு இணையவாசிகள் நகைச்சுவையாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



     

     



    இதே போன்று சமீபத்தில் குரங்கு ஒன்று அழகு நிலையத்தில் அமர்ந்து கொண்டு தனது முகத்தில் உள்ள முடிகளை ட்ரிம் செய்து கொள்ள முயற்சிக்கும் வீடியோ வைரலானது. முடி திருத்துபவர் மேலும் குரங்கினை அழகு படுத்த அனைத்தையும் அமர்ந்தவாறே தனது முகத்தை கொடுக்கின்றது குட்டிக் குரங்கு.



    இந்த வீடியோ பார்ப்பதற்கு க்யூட்டாக உள்ளது என ட்விட்டர் வாசிகள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.யூடியூப் மற்றும் ட்விட்டரில் இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகின்றது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி