• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கொரோனா காலத்தில் அரங்கேறிய Zoom Call அட்டகாசங்கள்!

கொரோனா காலத்தில் அரங்கேறிய Zoom Call அட்டகாசங்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கட்சியின் முகநூல் பக்கத்தில் அரசு விழா ஒன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பேட்டியளிக்கும்போது, பூனை பிளிட்டர் (Cat Flitters) தவறுதலாக ஆன் செய்யப்பட்டது. நேரலையில் ஒடிய இந்த நிகழ்ச்சியில், அவரின் முகத்தில் வித்தியாசமான பூனை மீசை மற்றும் தலையில் காது இருப்பதுபோல் தோன்றியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் நீதிமன்ற நடவடிக்கைகள் கூட ஜூம் கால்கள் வழியாக நடைபெற்றன. இதில் எதிர்பாராத சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறின. மக்களின் கவனத்தை ஈர்த்த ஜூம் கால் அட்டகாசங்களை இங்கு காணலாம்.

1.அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள 394 வது ஜூடிசியல் கோர்டில் வழக்கு விசாரணை ஒன்று நடைபெற்றது. வெர்ச்சுவல் மீட்டிங் வழியாக நடைபெற்ற இந்த விசாரணையில், நீதிபதி ராய் பெர்குசன் ஆன்லைன் வழியாக விசாரணையை தொடங்கினார். அப்போது, ஜூம் கால் -ஐ ஆன் செய்தபோது, திரையில் 2 வழக்கறிஞர்களுடன் ஒரு பூனையின் உருவமும் இடம்பெற்றது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் பான்டன் (Ponton) என்பவரின் முகம், செட்டிங்ஸில் ஏற்பட்ட சிறு கோளாறால் பூனையின் உருவமாக தோன்றியது. உடனடியாக அந்த டெக்னிக்கல் தவறை சரிசெய்யுமாறு நீதிபதி கூறினார். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் பான்டன், தனது உதவியாளர் தவறை சரி செய்து வருவதாக பதில் அளித்தார்.  

2.பிபிசி வேல்ஸ் தொலைக்காட்சியில் கொரோனா கால இடர்பாடுகள் குறித்து சிறப்பு நேரலை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. ஜூம் கால் வழியாக இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற யெவெட் ஆமோஸ் (Yvette Amos), கொரோனா பாதிப்பு குறித்து பேசினார். அப்போது, அவருக்கு பின்புறத்தில் இருந்த புத்தக அலமாரியில் ஆணின் ஆபாச உறுப்பு பொம்மை இடம்பெற்றிருந்தது. இது நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறியது.

3.டான் கிரவுட் (Dan Crowd) என்பவர் ஜூம் மீட்டிங்கில் தனது சகாக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென வெளியேறினார். ஆனால் அவரது உருவம் திரையில் அப்படியே தோன்றியது. இதுகுறித்து பின்னர் விளக்கம் அளித்த டான் கிரவுட்,  ஜூம் செயலியில் புதுமையான சில அம்சங்கள் இருப்பதாக கூறினார். அதன்மூலம், புகைப்படம் அல்லது வீடியோக்களை தங்களின் வெர்ச்சுவல் பேக்ரவுண்டாக செட் செய்துகொள்ள முடியும். இந்த ஆப்சனை பயன்படுத்தி தன்னுடைய புகைப்படத்தை பேக்ரவுண்டாக வருமாறு செட் செய்திருந்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

4.அமெரிக்காவில் முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் நிருபராக பணியாற்றிய ஜெர்ஃபி டூபைன் என்பவர், ஆன்லைன் மூலம் நிறுவனத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, திடீரென அவர் கைப்பழக்கத்தில் (masturbating) ஈடுபட்டது, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து பின்னர் பேசிய டூபைன், கேமரா ஆப் செய்யப்பட்டிருந்ததாக நினைத்து, கீழ்தரமான செயலில் ஈடுபட்டுவிட்டதாக கூறினார். இதற்காக, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.  

5.2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை எதிர்த்து களமிறங்கிய கிளாரி கிளிண்டன், அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேரதல் பிரச்சாரம் குறித்து MSNBC என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துகொண்டிருந்தார். ஜூம் கால் வழியாக இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தபோது, திடீரென ஜூம் செயலியின் பாப் அப் மெசேஜ் ஒன்று திரையில் தோன்றியது. அதில், "உங்களுடைய குரூப் மீட்டிங் 10 நிமிடத்தில் நிறுத்தப்படுகிறது, உங்களின் ஐடி துறை உதவியுடன் ஜூம் புரோவை குரூப் மீட்டிங்கிற்காக அப்கிரேட் செய்யுங்கள்" என அறிவுறுத்தப்பட்டது. தொலைக்காட்சியின் ஜூம் ஆப் அப்கிரேட் செய்ய வேண்டுமா? அல்லது கிளிண்டனின் ஆப் அப்கிரேட் செய்ய வேண்டுமா? என தெரியவில்லை.

6.PFAW என்ற அமைப்பின் அரசியல் பிரிவு இயக்குநராக இருக்கும் லிசெட் ஒகாம்போ (Lizet Ocampo), தன்னுடைய நிறுவன ஊழியர்களுடன் மைக்ரோசாப்ட் செயலி மூலம் குரூப் மீட்டிங்கில் பங்கேற்றார். அப்போது, அவரது முகம் உருக்கிழங்கு பிளிட்டரால் (filter) மறைக்கப்பட்டது. மீட்டிங் முடியும் வரை அவரால் அந்த பிளிட்டரை நீக்க முடியவில்லை. லிசெட் ஒகாம்போவுடன் மீட்டிங்கில் பங்கேற்ற ரேச்சல் கிளெக் (Rachele Clegg) என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கதில் இந்த சுவாரஸ்ய நிகழ்வின் புகைப்படத்தை பதிவிடுள்ளார்.

Also read... இணையத்தை பார்த்து முகம் முழுவதும் மஞ்சள் பேஸ்பேக் பூசிக்கொண்ட டிக்டாக் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

7.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கட்சியின் முகநூல் பக்கத்தில் அரசு விழா ஒன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பேட்டியளிக்கும்போது, பூனை பிளிட்டர் (Cat Flitters) தவறுதலாக ஆன் செய்யப்பட்டது. நேரலையில் ஒடிய இந்த நிகழ்ச்சியில், அவரின் முகத்தில் வித்தியாசமான பூனை மீசை மற்றும் தலையில் காது இருப்பதுபோல் தோன்றியது. சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய இந்த புகைப்படத்தை வைத்து, அவரை பலரும் கேலி செய்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: