கால்பந்து போட்டியின் போது தவறி விழுந்த பூனை ... காப்பாற்றிய ரசிகர்கள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கால்பந்து போட்டியின் போது தவறி விழுந்த பூனை

பூனை கீழே விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் மைதானத்தில் இருந்த அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

 • Share this:
  மியான்மரில் உள்ள மைதானத்தின் கால்பந்து போட்டியின் போது மேலிருந்து விழுந்த பூனையை அமெரிக்காவின் கொடியை வைத்து காப்பாற்றிய ரசிகர்களின் செயல் இணையத்தில் பலரின் பாராட்டு பெற்று வருகின்றது.

  மியான்மரில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது அரங்கின் மேல் தளத்தில் பூனை ஒன்று நுழைந்துள்ளது. மேலே நுழைந்த பூனை செல்ல வழி இல்லாமல் அங்கிருந்து இறங்கி வர முடியாமல் தொங்கியுள்ளது. இதனை கீழ்த்தளத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த அமெரிக்க கொடியை பூனையின் உயிரை காக்க பயன்படுத்தி உள்ளனர்.

  தாங்கள் கையில் வைத்திருந்த அமெரிக்க கொடியை பூனை மேலிருந்து கீழே விழும் போது விரித்து பிடித்து பயன்படுத்தி உள்ளனர். அடுத்த சில நொடிகளில் பூனை காப்பாற்ற பட்டது. பூனை கீழே விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் மைதானத்தில் இருந்த அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

   

     மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உடனே கூச்சலிட்டு தங்கள் பூனையை தூக்கிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

      

      

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: