Home » News » Trend

பூனையால் சுயநினைவை இழந்து ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. அப்படி என்ன நடந்தது? வீடியோவைப் பாருங்கள்

தீடிரென உயரத்தில் இருந்து பூனை விழுந்ததில் அந்த நபர் அங்கேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுந்து உ்ளளார்.

பூனையால் சுயநினைவை இழந்து ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. அப்படி என்ன நடந்தது? வீடியோவைப் பாருங்கள்
சிசிடிவி காட்சிகள்
  • Share this:
பூனை விழுந்ததில் ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் சுயநினைவை இழந்து அங்கேயே சுருண்டு விழும் வினோதமான வீடியோ சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால் புழு கடித்து கூட இறப்பார்கள் என்பார்கள். அதுப்போன்ற ஒரு சம்பவம் தான் இது என்றும் சொல்லலாம். சாதரணமாக ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது மிக உயரத்தில் இருந்து ஒரு பூனை அவர் மீது விழுந்துள்ளது.

தீடிரென உயரத்தில் இருந்து பூனை விழுந்ததில் அந்த நபர் அங்கேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுகிறார்.இந்த வீடியோ அங்கிருந்து சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.




பாதிக்கப்பட்ட நபர் தனது நாயுடன் தெருவில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றின் மீது இருந்து பூனை விழுந்துள்ளது. தீடிரென பூனை அந்த நபர் மீது பலமாக விழுந்ததால் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.

சுயநினைவை இழந்து ரோட்டில் மயங்கி விழுந்த நபரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி உள்ளனர். 23 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பி உள்ளார்.
First published: August 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading