ஒரு வினோதமான செயலில், சூடான் நாட்டு விமானம் ஒன்று கடந்த புதன்கிழமை கார்ட்டூம் சர்வதேச விமான நிலையத்தில் (Khartoum International Airport) அவசர அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது. காரணம் என்ன என்று தெரிந்தால் நீங்கள் சிரிப்பீர்கள்.
ஆம்... இந்த அவசர தரையிறங்கலுக்கு காரணம் ஒரு பூனை. கோபமாக இருந்த பூனை ஒன்று விமானியை தாக்கியதே இதற்கு காரணம். கத்தார் தலைநகரான தோஹாவுக்குச் செல்லும் சூடானின் டர்கோ விமானம் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் நுழைந்த பூனை ஒன்று விமானிகள் மீது பாய்ந்து அவர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, வேறு வழியின்றி விமானத்தை மீண்டும் கார்ட்டூம் சரவதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.
பூனை பயணிகள் விமானத்தின் விமானிகளுக்கான அறையில் பதுங்கி இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பூனை மிகுந்த கோபத்துடனும் காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து தரையிறங்குமாறு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பூனை எவ்வாறு விமானத்திற்குள் பதுங்கியது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து விமானத்தில் இருந்து பூனையை வெளியேற்றிய பின்னரும் இரவு முழுவதும் அந்த விமானம் புறப்படாமல் தாமதமானவே சென்றுள்ளது. உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலின்படி, அந்த பூனை விமான பயணிகள் யாருக்காவது சொந்தமானதா அல்லது துப்புரவு பணியின் போது யாருக்கும் தெரியாமல் விமானத்திற்குள் நுழைந்து விட்டதா போன்ற பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
Also read... கடைசி நேரத்தில் பிரேக்அப் செய்த காதலன் - காதலி எடுத்த அதிரடி முடிவு!
எது எப்படி இருந்தாலும் விமானத்தை இயக்குவதற்கு முன்பு விமானத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு பலமுறை செக் செய்து கொள்வது விமானியின் கடமை இருந்தும் கூட சில நேரங்களில் இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பது பொதுவாகவே உள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானியின் சாதுரியம் பலரால் பாராட்டப்பட்டது. ஐந்தறிவு ஜீவன்கள் எப்பொழுதும் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தும். அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனை எப்போதும் பலருக்கும் பிடித்த ஒன்று.
பலரும் தங்கள் வீட்டில் வளர்க்க பிரியப்படும் உயிரினம் என்றால் அது பூனை மற்றும் நாயாகத்தான் இருக்கும். ஆனால் பல நேரங்களில் அவை மோசமான செயல்களையும் செய்துவிடும் அதற்கு மேலே நாம் கண்ட செய்தியே உதாரணம். பூனையின் தாக்குதலை விமானி சாதுர்யமாக கையாண்டார். இல்லையென்றால் பயணிகளின் உயிர் அந்தரத்தில் மேலே ஊசலாடி இருக்கும். விமானத்திற்குள் பாம்பு, விமானத்தின் மீது மோதிய பறவை, போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை போல இப்போது பூனையின் இந்த அட்டகாசமும் இதில் இணைந்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.