• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அமெரிக்க நண்பருடன் ஓரினச்சேர்க்கை.. முதலிரவை விரும்பாத புதுமாப்பிள்ளை மீது வழக்கு..

அமெரிக்க நண்பருடன் ஓரினச்சேர்க்கை.. முதலிரவை விரும்பாத புதுமாப்பிள்ளை மீது வழக்கு..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆந்திராவில் அமெரிக்க நண்பருடன் ஒரினச்சேர்க்கை இருந்து கொண்டே பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பணி செய்து வருகிறார்.

    இவரது பெற்றோர் குண்டூரில் வசித்து வருகின்றனர். மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து குண்டூரை சேர்ந்த 25 வயது பெண்ணை தேர்வு செய்து நிச்சயம் செய்தனர். அண்மையில் நாடு திரும்பிய  வாலிபருக்கும், அந்த பெண்ணுக்கும் சில வாரங்களுக்கு ரூ 50 லட்சம் பணம் மற்றும் 70 சவரன் நகைகள் ஆகிய சீதனங்களை வழங்கி பெண் வீட்டார்  திருமணம் செய்து வைத்தனர்.

    கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மட்டும் அழைத்து எளிய முறையில் திருமணம் செய்தனர். அன்றிரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த அந்த பெண்ணிற்கு முதலிரவு ஏமாற்ற இரவாக மாறி பின்னர் அதுவே தொடர் கதை ஆனது.

    Also Read : மதுரை: மதுப்பிரியர்களை வரவழைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய யுக்தியை கடைபிடிக்கும் டாஸ்மாக்..

    அடுத்தடுத்த நாட்களிலும் புதுப் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் புதுமாப்பிள்ளை உறங்கச் சென்று விடுவது தொடர்ந்தது. இதனால் ஏமாற்றமடைந்த புதுப்பெண் யாரிடமும் சொல்ல முடியாமல் வேதனை அடைந்தார். இறுதியில் தனது தோழிகள் மூலம் தனது பெற்றோருக்கு தெரிவித்தார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புது மாப்பிள்ளையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த இளைஞரிடம் அழைத்து பெண்ணை உனக்கு பிடிக்கவில்லையா என கேட்க தொடங்கினர். ஆனால் அதற்கு சரியான பதில் கூறாமல் தட்டிக்கழிக்க தொடங்கினார். இறுதியில் அனைவரும் தட்டிக் கேட்டதால் வேறு வழியின்றி புது மாப்பிள்ளை உண்மையை கூறினார்.

    தனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபருக்கும் ஓரினச்சேர்க்கை ஏற்பட்டு நல்ல புரிதலுடன் வாழ்க்கை நடத்தி வருவதாகவும் எனவே பெண் மீதான மோகம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார். இதனைக் கேட்ட புதுப்பெண் மற்றும் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.



    இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் குண்டூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: