Tiger Missing: வங்கப்புலிக்கு ரூ.3.5 லட்சம் சன்மானம் - கடத்தல் நபரை பிடிக்க தீவிரம்!

வங்கப்புலிக்கு ரூ.3.5 லட்சம் சன்மானம்

குடியிருப்புகள் நிறைந்த அந்தப் பகுதியில் புலி உறுமியவாறு சர்வ சாதாரணமாக உலாவியது குடியிருப்பு வாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் காணாமல்போன வங்கப்புலியை முறையாக ஒப்படைத்தால் 3.5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என Big Cat Rescue அமைப்பின் சி.இ.ஓ கரோல் பாஸ்கின் அறிவித்துள்ளார்.

அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தின் வெஸ்ட் ஹூஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் வங்கப்புலி ஒன்று சுற்றித்திரிந்தது. குடியிருப்புகள் நிறைந்த அந்தப் பகுதியில் புலி உறுமியவாறு சர்வ சாதாரணமாக உலாவியது குடியிருப்பு வாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள், புலியின் நடமாட்டத்தைக் கண்டு அஞ்சினர். பாதுகாப்புக்காக சிலர் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டனர்.

தகவலையடுத்து அங்கு வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குடியிருப்பு பகுதியில் உலாவிய வங்கப்புலியை காரில் வந்த நபர் ஒருவர் அழைத்துச் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சமூகவலைதளங்களிலும் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களில் அடுத்தடுத்து வெளியானது. புலி அங்கு எப்படி வந்தது? யார் அந்த புலியை அழைத்துச் சென்றது என்பது குறித்து? விசாரணையை நடத்திய காவல்துறையினர் புலியை அழைத்துச் சென்றவரின் அடையாளத்தை கண்டுபிடித்தனர்.

கொலைவழக்கில் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற விக்டர் ஹ்யூகோ கியூவாஸ் (Victor Hugo Cuveas) என்பவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அவர் வங்கப் புலியை காரில் அழைத்துச் சென்றது சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து விக்டர் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசியபோது, புலியின் பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதாகவும், இதில் விக்டருக்கு என்ன தொடர்பு? என்பது பற்றி தனக்கு தெரியாது எனக் விளக்கமளித்துள்ளார். இதனிடையே, வங்கப்புலியை கண்டுபிடிக்க வலியுறுத்தி கரோல் பாஸ்கின் இன்ஸ்டாகிராமில் குரல் கொடுத்துள்ளார்.

Big Cat Rescue அமைப்பின் சி.இ.ஓ மற்றும் நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பான Tiger King சீரிஸின் பிரபலமான அவர் வெளியிட்டுள்ள பதிவில், வங்கப் புலியை யார் வைத்திருந்தாலும், அரசு அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டால் 3.5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிகாரிகளுடன் இணைந்து விலங்குகள் கடத்தலில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்படும் என்றும், கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Also read... வெறும் ரூ.1.5 லட்சத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர் - காரணம் என்ன தெரியுமா?

அமெரிக்காவில் வங்கப் புலி சுற்றித் திரிந்தது மற்றும் அதனை கடத்தல்காரர்கள் மீண்டும் பதுக்கியுள்ளது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் விலங்குகள் கடத்தல் தொடர்வது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விலங்குகள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: