முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இயற்கை தாயின் மடியில் பிறந்து.. இவ்வளவு அழகான இடமா? எழில்கொஞ்சும் முகாஃபி!

இயற்கை தாயின் மடியில் பிறந்து.. இவ்வளவு அழகான இடமா? எழில்கொஞ்சும் முகாஃபி!

அருணாசலப் பிரதேசத்தில் மறைந்திருக்கும் அழகிய பகுதி

அருணாசலப் பிரதேசத்தில் மறைந்திருக்கும் அழகிய பகுதி

அருணாசலப் பிரதேசத்தில் சாங்லாங் மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கும், உலக சுற்றும் நபர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

  • Last Updated :
  • Arunachal Pradesh, India

அருணாசலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் சாங்லாங் மாவட்டத்தின் அழகைச் சன்னி கே சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் முகாஃபி பயணம் என்று குறிப்பிட்டுப் பதிவிடப்பட்ட வீடியோவில் அந்த பகுதியில் பிரம்மிக்க வைக்கும் அழகு தெரிகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சாதாரணமாகவே சுற்றுலா செல்லவும் சாகச பயண செல்லவும் வடகிழக்கு பகுதி முக்கிய பகுதியாகத் திகழ்கிறது. அந்த வகையில் அங்கு மறைந்திருக்கும் ஒரு அழகிய பகுதியை ஐஏஎஸ் அதிகாரி வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட பதிவில் அந்த பகுதியைப் பற்றிய குறிப்பையும் அங்கு இருக்கும் இயற்கை அழகைப் பற்றியும் தெரிவித்துள்ளார். 4050 மீட்டர் (13288 அடி) உயரம், விஜய நகரில் இருந்து மலையேறி வந்தால் 30 கி.மீ என்று அந்த அழகிய பகுதி அமைந்திருக்கும் இடத்தையும் மற்றும் ஆல்பைன் புல்வெளிகள், ஆர்சிட் மலர் பாதை, தாவரவியல் சொர்க்கம், பறவைகள் சொர்க்கம் என்று அங்கு உள்ள இயற்கை அழகையும் அவர் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கம்லுங் மொசாங், சோனம் சோம்பேவையும் அவர் டேக் செய்துள்ளார். அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் வகையில் அருணாச்சல சுற்றுலாத் துறையும் அந்த பதிவில் இணைத்துள்ளார்.

Also Read : சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் யாமேங் நீர்வீழ்ச்சி.. எங்கு இருக்கிறது தெரியுமா.? - அதன் அழகியல் சிறப்புகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.!

தற்போது 2 நிமிடமுள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அருணாசலப் பிரதேச அரசு அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முயற்சி செய்து வரும் நிலையில் அங்குச் செல்லுவதற்காகச் சரியான பாதை வசதி இல்லை என்று நெடிசன்கள் கருத்துகளாகப் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு தேகோ அப்னா பிரதேஷ் என்ற பரப்புரையை அரசு தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Arunachal Pradesh, Tourism, Viral Video