Home /News /trend /

கூச்சமாக இருந்தாலும் இதை குடிப்பதை நிறுத்த முடியவில்லை - "தல" தோனியின் சுறுசுறுப்பிற்கான சீக்ரெட் இது தான்!

கூச்சமாக இருந்தாலும் இதை குடிப்பதை நிறுத்த முடியவில்லை - "தல" தோனியின் சுறுசுறுப்பிற்கான சீக்ரெட் இது தான்!

MS தோனி

MS தோனி

“பெரியதாக எதுவும் இல்லை. எனக்கு டீ குடிக்க ரொம்ப பிடிக்கும். பாலும் சர்க்கரையும் கலந்து சூடாக ஒரு டீ வரும் போது எப்போதுமே நான் அதற்காக ஏங்குவேன். ஒருவேளை அப்படிப்பட்ட தலைமுறையில் வளர்ந்ததால் என்னவோ “டீ” நமக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது என்று கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ranchi, India
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனும்,  அனைவராலும் அன்பாக “தல” என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி நம் அன்றாடம் குடிக்கும் தேநீரை தான் அவரின் சுறுசுறுப்புக்கான ரகசியமாக கூறியிருக்கிறார்.

    சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு நேர்காணலில் “நான் எங்கே எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் யாராவது என்னிடம் டீ குடிக்கிறீர்களா என்று கேட்டால் கண்டிப்பாக என்னால் முடியாது என்று சொல்ல முடியாது. விளையாடுவதற்காக ஏதேனும் போட்டிகளுக்கு செல்லும்போது கூட டீ குடிப்பதற்கான ஆர்வத்தை கட்டுபடுத்த முடியவில்லை.. அந்த அளவிற்கு நான் ஒரு டீ வெறியன்” என அவர் தெரிவித்துள்ளார்.

    அந்த நேர்காணலில் அவரிடம் “நீங்கள் மிகவும் ஏங்கும் அதே சமயத்தில் உங்களால் தவிர்க்கவே முடியாது” என்ற ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி கூறுமாறு கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “பெரியதாக எதுவும் இல்லை. எனக்கு டீ குடிக்க ரொம்ப பிடிக்கும். பாலும் சர்க்கரையும் கலந்து சூடாக ஒரு டீ வரும் போது எப்போதுமே நான் அதற்காக ஏங்குவேன். ஒருவேளை அப்படிப்பட்ட தலைமுறையில் வளர்ந்ததால் என்னவோ “டீ” நமக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது என்று கூறினார்.

    மேலும் அவர் “நான் பயிற்சிக்கு செல்லும் போதெல்லாம் யாரேனும் என்னிடம் ஒரு கப் டீ-யை நீட்டி வேண்டுமா என்று கேட்டால் என்னால் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்ல முடியாது. இதுவே ஒரு குலாப் ஜாமுனையோ அல்லது ஜிலேபியையோ காண்பித்து வேண்டுமா என்று என்னிடம் கேட்டால், மிக எளிதாக வேண்டாம் என்று அவற்றை ஒதுக்கி விட என்னால் முடியும். ஆனால் இதுவே யாராவது என்னிடம் வந்து டீ குடிக்கிறீர்களா என்று கேட்டால் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் “அப்படியா வாருங்கள் போய் டீ குடிப்போம்” என்று சொல்லும் மனநிலையிலேயே நான் எப்போதும் இருப்பேன்.

    Read More: 3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள்..! -அட நம்புங்க பாஸ்

    இதை சொல்வதற்கு சற்று கூச்சமாக இருந்தாலும் இதுதான் உண்மை. அதே ஏக்கத்தோடும், ஆர்வத்தோடும் முதல் கப் டீயை நாவில் ருசிக்கும் போது ஏற்படும் அந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இதனால்தான் எப்போதும் பயிற்சிக்குப் பிறகு நாங்கள் கண்டிப்பாக டீ அருந்துவோம். சில நேரங்களில் வாய்ப்பு கிடைத்தால் பயிற்சிக்கு முன்னதாகவே கூட டீ அருந்துவோம். டீ குடிப்பது எப்போதுமே சந்தோஷத்தை எனக்கு கொடுக்கிறது அதனால் தான் என்னால் எப்போதும் அதனை தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

    டீ என்பது அனைத்து இந்தியர்களின் வாழ்வோடு இணைந்த ஒன்று. நீங்கள் மிகவும் கவலையுடன் இருக்கும் போது நீங்கள் அருந்தும் ஒரு கப் டீ-ஆனது எப்போதும் உங்களுக்கு ஒரு நல்ல தோழனாகவும்,  மனதளவில் ஆறுதலையும் அளிக்கும். அந்த வகையில் தல தோனியின் டீ குடிப்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் தனது செல்ல பிராணியான “ஹனி” என்ற பெயரை கொண்ட கிளியை தன் தோளில் அமர வைத்து, இவர் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றினை அவர் மனைவி ‘சாக்ஷி தோனி’ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதற்கு கீழே “மாஹி அண்ட் ஹிஸ் ஹனி ❤️” என்ற வார்த்தைகளையும் இணைத்துள்ளார்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: Dhoni, MS Dhoni, Sakshi dhoni

    அடுத்த செய்தி