ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பேச்சிலர்ஸ்களுக்கு வீடு கிடைக்கல - டிவிட்டரில் ஆற்றாமையை பகிர்ந்து கொண்ட பெங்களூரு பெண்.!

பேச்சிலர்ஸ்களுக்கு வீடு கிடைக்கல - டிவிட்டரில் ஆற்றாமையை பகிர்ந்து கொண்ட பெங்களூரு பெண்.!

வீடு

வீடு

Trending | முன்பெல்லாம் ஆண்கள் என்றால் தான் வீடு கிடையாது என்று சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண்கள் என்றாலும் பேச்சிலராக இருந்தால் அவர்களுக்கும் வீடு கிடையாது என்பதே பதிலாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊரெங்கும் அடுக்கடுக்காக வீடுகள் இருந்தாலும், நாம் அவசரத்திற்காக வாடகைக்கு வீடு தேடும்போது கிடைக்காது என்பது தெரிந்த விஷயம் தானே. இப்போதெல்லாம் வாடகைக்கு வீடு தேடுவதற்கு பல ஆன்லைன் தளங்கள் வந்துவிட்டாலும், நேரடியாக தேடிப் பிடிப்பதை போல வராது.

வீட்டை நேரில் பார்த்து, அதில் நமக்கு தேவையான சௌகரியங்கள், வசதிகள் உள்ளனவா என்பதை பார்த்து, முன்பணம் எவ்வளவு, அட்வான்ஸ் எவ்வளவு என்று அதே இடத்தில் பேசி முடித்துவிட வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமாக இருக்கும். ஆனால், களத்தில் இறங்கி, ஓரிரு தெருக்களை சுற்றி வந்து, நான்கு, ஐந்து வீடுகளில் ஏறி, இறங்கினால் போதுமானது. அத்துடன் நம் உடம்பில் உள்ள தெம்பு எல்லாம் போய்விடும்.

வீடு தேடி, தேடி நாம் களைத்துப் போய்விடுவோம். அத்துடன் அலுவலகத்தில் வேறு அதிக விடுப்பு எடுக்க முடியாது. ஆக, நாம் என்ன செய்வோம். அந்தப் பகுதி சார்ந்த இடைத்தரகரிடம் நம் தேவைகளை குறிப்பிட்டு, வீடு தேடச் சொல்வோம்.

பேச்சிலர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்

வீடு தேடுவதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்ற அதே சமயத்தில், பேச்சிலர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதிலும் முன்பெல்லாம் ஆண்கள் என்றால் தான் வீடு கிடையாது என்று சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண்கள் என்றாலும் பேச்சிலராக இருந்தால் அவர்களுக்கும் வீடு கிடையாது என்பதே பதிலாக இருக்கிறது.

இத்தகைய நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ருச்சிதா என்ற பெண், தானும், தன் தோழியும் இணைந்து தங்குவதற்கு வீடு வேண்டும் என்று இடைத்தரகரிடம் கூறியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக விசாரித்து, உரிமையாளர்கள் போட்ட கண்டிஷன்களை இடைத்தரகர் வாட்ஸ் அப் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

Also Read : கண்ணுக்கு தெரியாத நபரிடம் பேசிய காவலாளி... வந்தது யார்? ஷாக்கிங் வீடியோ பின்னணி

இதில் கொந்தளித்துப் போன அந்தப் பெண், தன் ஆற்றாமையை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலில் ஒரு வீட்டில் விசாரித்தபோது, இந்தப் பெண் பார்ட்டி எல்லாம் கொண்டாடுபவரா என்று விசாரித்துள்ளனர். அதற்கு இதுபோல கேள்விகளை கேட்பவர்களின் வீடு வேண்டாம் என்று இவர் பதில் அளித்துள்ளார்.

அடுத்ததாக மற்றொரு வீட்டை குறிப்பிட்ட இடைத்தரகர், அங்கும் பார்டி மற்றும் ஆண் நண்பர்களுக்கு அனுமதி இல்லை என்ற கண்டிஷனை கூறியிருக்கிறார். மற்றொரு இடத்தில் திருமணமான தம்பதியருக்கு மட்டுமே வீடு தர முடியும் என்று குறிப்பிட்டார்களாம்.

Also Read : அரிதான நிகழ்வு.. இரண்டு அங்குல வாலுடன் பிறந்த பெண் குழந்தை !

இதற்கு ருச்சிதா அளித்த பதிலில், “எனக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஒவ்வொரு இடைத்தரகரும் கேள்வி கேட்கின்றனர். ஏனென்றால், திருமணமானவர்களுக்கு மட்டும்தான் வாழ வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மட்டும்தான் வீடு தேவைப்படும்.

நாளையில் இருந்து நானும் திருமணமான பெண்ணாக மாறப் போகிறேன். என்னுடைய கணவர் ஒரு பேய் தான். பார்ட்டி மற்றும் ஆண் நண்பர்கள் இல்லை என்பதை அவர் உறுதி செய்வார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். டிவிட்டர் பயனாளர்கள் பலரும் இந்தப் பெண்ணின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Bangalore, Tamil News, Trending, Twitter