ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மூன்று வயது குழந்தையின் அரிய நோயை குணப்படுத்திய கஞ்சா எண்ணெய்..!

மூன்று வயது குழந்தையின் அரிய நோயை குணப்படுத்திய கஞ்சா எண்ணெய்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்க்கப்படும் கஞ்சாவில் மனிதனுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய 500க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கஞ்சா அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள். மனிதனை போதைக்கு அடிமையாக்கி, பல்வேறு நாச வேலைகளுக்கு கஞ்சா இட்டுச்செல்லும்  என்பதால் உலகின் பல நாடுகளில் கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி, மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கஞ்சாவில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்தருந்தாலும், அந்த கஞ்சா வலி நிவாரணியாக பயன்படுவது மருத்துவ ரீதியாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு மூன்று வயது குழந்தைக்கு Van der Knaap syndrome என்ற விநோத நோய் இருப்பது மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது. அதாவது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கழுத்து நேராக நிற்காது. அதோடு அவர்கள் கழுத்தை எந்தப்பக்கமும் திருப்ப முடியாது. கோடியில் ஒருவருக்கும் ஏற்படும் இந்த நோயால் அந்தக் குழந்தை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக பல மருத்தவர்களை அனுகினார்கள் குழந்தையின் பெற்றோர். ஆனால் அந்த நோய்க்கு சிகிச்சையே இல்லை என கையை விரித்துவிட்டார்கள் மருத்துவர்கள். ஆனால் அவர்களின் குடும்ப மருத்துவரான ஷ்ருதி ஸ்ரீதர் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அதோடு குழந்தைக்கு மெடிகல் கேனபிஸ் ஆயில் எனப்படும் கஞ்சா எண்ணெயை தடவ அறிவுறுத்தியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு 9 மாத குழந்தையாக இருந்த போது அவருக்கு இந்த விநோத நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த நோய்க்கான மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவ ஆய்வறிக்கை மற்றும் கட்டுரைகளை தேடி தேடி படித்தபோது, சிபிடி எனப்படும் கஞ்சா எண்ணெய் இதற்கு நிவாரணம் அளிப்பதை தான் கண்டு கொண்டதாகவும், அதன்படி குழந்தைக்கு கஞ்சா எண்ணெய் கொண்டு சிகிச்சை கொடுக்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார் மருத்துவர் ஷ்ருதி ஸ்ரீதர். இந்த இரண்டரை ஆண்டுகளில் குழந்தைக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.

Read More : பேச்சிலர்ஸ்களுக்கு வீடு கிடைக்கல - டிவிட்டரில் ஆற்றாமையை பகிர்ந்து கொண்ட பெங்களூரு பெண்.!

இந்த கஞ்சா எண்ணெய் புதிய நியூரான்களை உருவாக்கி, நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது என்றும் கூறுகிறார் மருத்துவர் ஷ்ருதி ஸ்ரீதர். கஞ்சா எண்ணெய் மருத்துவ ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் பல நாடுகளில் பல நுற்றாண்டுகளாக இருந்தாலும், கஞ்சா தொடர்பான எதிர்மறையான எண்ணங்களால் அந்த சிகிச்சை முறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார் மருத்துவர் ஷ்ருதி ஸ்ரீதர். கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வும், விளக்கங்களும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்க்கப்படும் கஞ்சாவில் மனிதனுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய 500க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், எதிர்மறை கருத்தாக்கத்தால் அதை பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த 2 ஆண்டுகளில் தனது கிளினிக் மூலம், கேன்சர் உள்ளிட்ட நாள்பட்ட மற்றும் வலி மிகுந்த நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 200 நோயாளிகளுக்கு சிபிடி ஆயில் மூலம் சிகிச்சை அளித்து, நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறுகிறார் மருத்துவர் ஷ்ருதி ஸ்ரீதர். கஞ்சா எண்ணெய் குறித்த நன்மைகளை பாலக்காட்டை சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் மூலம் தான் அறிந்து கொண்டதாகவும், இதுவரை சையது சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கஞ்சா எண்ணெய் மூலம் சிகிச்சை அளித்து வெற்றி கண்டுள்ளதாகவும் கூறும் மருத்துவர் ஷ்ருதி, தற்போது தானும் நிறைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

First published:

Tags: Trending, Viral