ஊரடங்கு போடப்பட்ட சிறிது நேரத்தில் கனடா தம்பதி செய்த வினோத செயல்: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!

ஊரடங்கு போடப்பட்ட சிறிது நேரத்தில் கனடா தம்பதி செய்த வினோத செயல்: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு!

மாதிரி படம்

தனது கணவர் கழுத்தில் லீஷ் (leash) என்றழைக்கப்படும் நாயை அழைத்து செல்ல உதவும் பெல்ட் மூலம் கட்டப்பட்டிருந்தபடி நடந்து சென்றுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
இரவு ஊரடங்கின் போது ஒரு வினோதமான சம்பவத்தில் ஈடுபட்ட கனடாவை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு தலா 1500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கனடாவின் கியூபெக் (Canada's Quebec) பகுதியில் கடந்த ஜன.9ம் தேதி (சனிக்கிழமை) முதல் இரவு ஊரடங்கு (Curfew) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு போடப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது 9 மணியளவில் தனது கணவருடன் பெண் ஒருவர் வீட்டிற்கு வெளியே நடந்து சென்றபோது பிடிக்கப்பட்டார். 

அதுவும் தனது கணவர் கழுத்தில் லீஷ் (leash) என்றழைக்கப்படும் நாயை அழைத்து செல்ல உதவும் பெல்ட் மூலம் கட்டப்பட்டிருந்தபடி நடந்து சென்றுள்ளார். விதிகளை மீறிய அந்த தம்பதியை கண்டுபிடித்த காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி ஏன் ஊரடங்கு விதிகளை மீறினீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அந்த பெண், தான் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு தனது நாயை வீட்டிற்கு வெளியே ஒரு கி.மீ தொலைவிற்குள் வாக்கிங் கூட்டிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அருகில் இருந்தது நாய் அல்ல அவரது கணவர். அந்த பெண் சொல்வதை கேட்டு கோபமடைந்த போலீசார், உங்கள் கணவர் ஒரு நாய் அல்ல என்று சுட்டிக்காட்டிய போது, அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் தலா 1500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அபராதம் செலுத்த அந்த பெண் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸின் புதிய அலை காரணமாக தினமும் 2,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இன்னும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்காக அப்பகுதியில் ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கை கடந்த 9ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி நீட்டித்து உத்தரவிட்டது.

Also read... திடீரென தாக்கிய சிறுத்தை - சிங்கிளாக ஹேண்டில் செய்து உயிர்பிழைத்த பெண்!

கியூபெக் மாகாணத்தின் தலைவர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் (Quebec premier Francois Legault) என்பவரால் இந்த இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதன் மூலம் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி பயன்பாடுகளை விரைவுபடுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும் என்றும் பொதுக்கூட்டங்கள், வீடுகளில் ஏதேனும் விழாக்களுக்கு சேரும் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பகல் நேரங்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த தொற்றுநோயிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், கொரோனாவின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும், தடுப்பூசி முயற்சிகளின் வேகம் குறைந்து வருவதால் அரசாங்கம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஜன.12) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Prime Minister Justin Trudeau) கூறியதாவது, இந்த கட்டுப்பாடுகள் ஒட்டாவா தடுப்பூசி உருவாக்கத்தின் வேகத்தை அதிகரிக்க உதவும் என்று உறுதியளித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: