கஞ்சா செடியை சுவைத்த குட்டி எலிக்கு நேர்ந்த சோகம் - வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு

கனடாவின் நியூ பிரன்சுவிக் நகரில் சிறிய அளவிலான கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமானது.

 • Last Updated :
 • Share this:
  கனடாவில் கஞ்சா செடிகளில் இருந்து சில இலைகளை சாப்பிட்டு அந்த போதையில் தாவரங்களுக்கு இடையே இருந்த குப்பைகளில் கிடந்த குட்டி எலியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  கனடாவின் நியூ பிரன்சுவிக் நகரில் சிறிய அளவிலான கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமானது. அங்கு வசிக்கும் தாவரங்களின் உரிமையாளரான கொலின் சல்லிவன் என்பவர் கஞ்சா செடியை வளர்த்து வருகிறார். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள், கவனமாக வளர்க்கும் தனது கஞ்சா பயிரிலிருந்து சிறிய அளவிலான இலைகள் முளைத்திருப்பதை கவனித்து வந்துள்ளார்.

  ஒரு சிறிய எலி அந்த இலைகளை விட்டு விலகி செல்வதையும் அவர் கவனித்துள்ளார். அதன் பின்னர் தனது கஞ்சா செடியின் இலைகளை காணவில்லை என்று சந்தேகித்த அவர், இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு சிறிய எலி போதையின் உச்சத்தில் தனது முதுகை தட்டையாக வைத்து மல்லாந்து படுத்து கிடப்பதை கண்டுபிடித்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

  https://www.facebook.com/colin.sullivan.1401/posts/4024586177558824

  அந்த புகைப்படத்தை செப்டம்பர் 2ம் தேதி பதிவிட்ட சல்லிவன், "இந்த  புகைப்படம் தனது நண்பருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவரும் கஞ்சாவால் உச்ச போதை அடைவார். மேலும் அவர் ஒரு நாளைக்கு ஒரு இலையை தனது போதைக்காக எடுத்து கொள்வார்." என்று எழுதியுள்ளார்.  மேலும் சல்லிவன் தனது பேஸ்புக்கில் அந்த எலியின் நிலை குறித்த புகைப்படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்துள்ளார். விதைகள் மற்றும் தண்டுகளுக்கு இடையே அதிக போதையுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துகொண்ட அவர், “போதை பொருளுடன் நீண்ட மற்றும் அவநம்பிக்கையான போருக்கு பிறகு, இந்த சிறிய சுட்டி எலி தனது செடியின் விதைகளையும், தண்டுகளையும் எடுத்து கொண்டு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது.புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவருக்கும், இந்த கஞ்சா செடி அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து வெளிவர உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: