ஜூம் மீட்டிங்கின் போது நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றி உறுப்பினர்களை அதிர்ச்சியடைய செய்த எம்.பி!

ஜூம் மீட்டிங்கின் போது நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றி உறுப்பினர்களை அதிர்ச்சியடைய செய்த எம்.பி!

ஜூம் மீட்டிங்கின் போது நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றிய எம்.பி

வீடியோ கான்பரன்சிங் வழியே சில சுவாரஸ்யமான அல்லது தர்மசங்கடமான நிகழ்வுகள் அரங்கேறி வருவது கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக இன்று அலுவலக பணிகள், வகுப்புகள் மற்றும் மீட்டிங்குகள் என அனைத்தும் ஆன்லைன் வழியே நடக்கின்றன. சில நேரங்களில் வீடியோ கான்பரன்சிங் வழியே வகுப்புகள் அல்லது அலுவலக மீட்டிங்குகள் நடக்கும் போது சில நகைச்சுவையான, சுவாரஸ்யமான அல்லது தர்மசங்கடமான நிகழ்வுகள் அரங்கேறி வருவது கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. வீடியோ அழைப்புகளில் மக்கள் அல்லது பிரபலங்கள் சங்கடமான விஷயங்களை செய்து பிடிபடுவது இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகில் ஒரு வழக்கமான விவகாரமாக மாறியுள்ளது.

உலகம் முழுவதும் இதே போல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலக சந்திப்புகள் மட்டுமின்றி ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கூட ஆன்லைன் வழியே நடத்தப்பட்டு தேவையான விவாதங்கள் செய்யப்பட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வட அமெரிக்க நாடான கனடாவில் வீடியோ கான்பரன்சிங்கின் போது நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.பி.,க்கள் பலரும், வீடியோ கான்பரன்சிங் வழியே பங்கேற்று வருகின்றனர்.

ஜூம் கால் (Zoom call) மூலம் சில கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீடிங்கில் பங்கேற்று இருந்தனர். ஜும் கால் சந்திப்பின் போது கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாரதவிதமாக நிர்வாணமாக ஸ்கிரீனில் தோன்றியதால் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கனடாவின் லிபரல் பார்ட்டியின்( Liberal Party) நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான வில்லியம் அமோஸ் (William Amos) எனபவரே இவ்வாறு திரையில் தோன்றி உள்ளார். கையில் மொபைல் போனுடன், ஒரு டேபிளுக்கு பின் வில்லியம் அமோஸ் நிர்வாணமாக நின்ற ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் உடை ஏதும் போடாத நிலையில் நல்ல வேளையாக தனது அந்தரங்க பகுதியை கையிலிருக்கும் மொபைலை வைத்து அவர் மறைந்துள்ளது போன்று காட்சிகளே பொதுவெளியில் பரவி உள்ளன.

Also read... போலீஸ் விசாரணையின் போது பொதுவெளியில் வாயு வெளியேற்றிய நபருக்கு அபராதம்!

இதனை அடுத்து நாட்டின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த வீடியோ கான்பரன்சிங்கில் சகிக்க முடியாத வகையில் நிர்வாணமாக தோன்றிய எம்.பி வில்லியம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி எம்.பி-க்கள் பலரும் கோரியுள்ளனர். தனது இந்த செயல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வில்லியம், இது எதிர்பாராவிதமாக நடந்து விட்டது. வாக்கிங் சென்று விட்டு நான் போட்டிருந்த உடைகளை மாற்றிய போது இந்த சம்பவம் நடந்து விட்டது. நான் மிகவும் துரதிர்ஷ்டவசமான தவறைச் செய்து விட்டேன், வெளிப்படையாக வெட்கப்படுகிறேன். சபையில் உள்ள எனது சக ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: