Home /News /trend /

இந்த படத்தில் மறைந்துள்ள மற்றொரு விலங்கை 20 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

இந்த படத்தில் மறைந்துள்ள மற்றொரு விலங்கை 20 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

Trending

Trending

Optical Illusion | ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷனை சார்ந்த படங்கள் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட முறையாகும். இது பல ஆண்டுகளாக பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது.

    இன்று இணையத்தில் பல்வேறு விதமான செய்திகளும், தகவல்களும் உலா வந்தாலும், அவற்றில் சில மட்டுமே நமது ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. நாம் பார்க்கின்ற ஒன்று நமக்கு பொழுதுபோக்க கூடிய ஒன்றாகவும், மகிழ்ச்சி தர கூடியதாகவும் இருந்தால் அதை பலருக்கும் பகிர செய்வோம். இதற்கு முக்கிய காரணம் அந்த தகவல்களில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் தான். இப்படிப்பட்ட படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ஏராளமாக உள்ளன.

    இவற்றில் சில படங்கள் எந்த வித எழுத்துக்களும் இல்லாமலும் வியப்பானதாக இருக்கும். குறிப்பாக ஆப்டிகல் இல்யூஷன் வகையை சேர்ந்த படங்கள் நமக்கு புதிர்கள் போன்று தெரியும். மேலும் இவை நமது ஆர்வத்தை தூண்ட கூடியதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒளிந்துள்ள உண்மையான தந்திரங்களை நம்மால் பல நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதற்கு காரணம் இவை நமது கண்களையும், மூளையையும் ஏமாற்ற கூடிய ஒன்றாக உள்ளது.

    ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷனை சார்ந்த படங்கள் இல்லாத ஒன்றைக் காண நம் கண்களையும் மூளையையும் ஏமாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட முறையாகும். இது பல ஆண்டுகளாக பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. அதே போன்று, இன்று இணையத்தில் உலா வரும் பல படங்கள் நமக்கு ஆச்சரியத்தை தர கூடிய விதத்தில் அமைகின்றன. இந்த வகை படங்கள் தற்போது தான் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதன்படி, இந்த பதிவில் உள்ள படத்தில் ஒரு பறவையும், ஒரு விலங்கையும் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

    பல வகையான வண்ணமான ஆப்டிகல் இலுஷன்கள் இருந்தாலும், இது போன்ற கருப்பு மற்றும் வெள்ளை ஒளியியல் மாயைகள் மிகவும் கடினமானவை. இந்த படத்தில் உங்களால் ஒரு மரத்தில் ஒரு பறவை உள்ளது போன்ற தோற்றத்தை காண முடியும். இதன் மூலம் எளிதில் பறவையை கண்டுபிடித்து விடலாம். ஆனால் இதில் கடினமான விஷயம் என்னவென்றால் படத்தில் ஒளிந்துள்ள இரண்டாவது விலங்கைக் கண்டுபிடிப்பது தான்.



    ஆம், இந்த படத்தை மிகவும் உற்று நோக்கி கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இதில் ஒளிந்துள்ள விலங்கை 20 நொடிகளில் கண்டுபிடிப்பவரை சிறந்த மூளைக்காரர் என்று அர்த்தம்.இந்த படத்தை டொக் டாக் பயனாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்த பிறகு, பலரும் இதில் ஒளிந்துள்ள விலங்கு எங்கே என்று கமெண்ட் செய்திருந்தனர். பலரால் இந்த புதிரில் தோல்வியை மட்டுமே அடைய முடிந்தது.

    Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் புலி... கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

     

    சரி, நீங்கள் பல மணி நேரம் தேடி பார்த்தும் இதில் ஒளிந்துள்ள விலங்கு எங்கே என்று தெரியவில்லையா? இனி நாங்கள் உங்களுக்கு அதை கண்டுபிடிக்க உதவுகிறோம். இதற்கு முதலில் உங்கள் மொபைலை தலைகீழாக வையுங்கள். இப்போது நன்றாக உற்று பாருங்கள். இதில் ஒரு விலங்கின் உருவம் உங்களுக்கு தெளிவாக தெரியும். ஆம், இது ஒரு நரியின் உருவம். ஒருவழியாக இதில் ஒளிந்திருந்த புதிரை கண்டுபிடித்து விட்டீர்கள்.

    Also Read : நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது..? உங்கள் ஆளுமை பண்பு குறித்து நாங்கள் சொல்கிறோம்! 

    இந்த படத்தில் ஒரு பறவை சீஸ் துண்டை வைத்திருப்பதை முதலில் காண முடியும். அடுத்தாக ஒரு நரி தனது கையில் சீஸ் துண்டு திருடுவதை போன்ற காட்சி இருக்கிறது. இதுதான் இதற்கான விடையாகும்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி