Home /News /trend /

மூளைக்கு வேலை... இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தை உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?

மூளைக்கு வேலை... இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தை உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | இந்த படத்தில் உள்ள வனப்பகுதி காட்சி அழகாக இருந்தாலும் இதில் ஒரு ஆந்தை மறைந்துள்ளது.

    ஒளியியல் மாயைகள் என்று அழைக்கப்படும் ஆப்டிகல் இலுஷன்கள் மிகவும் வித்தியாசமானவை. இவை படங்கள் அல்லது வீடியோக்கள் வழியாக நம்மை குழப்ப கூடியவை. உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக நம்மை உணர செய்பவை.

    பொதுவாக நம் கண்கள் நம் மூளைக்கு தகவல்களை அனுப்பும் போது அது நிகழ கூடிய ஒன்றை எடுத்து கூறி நம்மை நம்ப வைக்கிறது. மேலும், அது யதார்த்தத்துடன் பொருந்தாத ஒன்றை உணரும்படி நம்மை ஏமாற்றுகிறது. கிட்டத்தட்ட இது ஒரு "மாயை" போன்ற உணர்வை தர கூடியவை தான்.

    ஆங்கிலத்தில் கூறப்படும் 'illusion' என்கிற வார்த்தை லத்தீன் வார்த்தையான இல்லுடெரே என்பதிலிருந்து வந்தது, அதாவது "போலியாக செய்வது" என்று அர்த்தமாகும். அந்த வகையில் பல வகையான ஆப்டிகல் இலுஷன் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவை இந்த அளவிற்கு வைரலாக காரணம், இதில் உள்ள சுவாரசியம் தான். ஆப்டிகல் மாயைகள் உண்மையில் இல்லாத ஒன்றை இருப்பது போன்று உணர செய்கிறது.

    அந்த வகையில் இன்றைக்கான ஆப்டிகல் இலுஷன் புதிர் இதோ உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் தற்போது பார்த்து கொண்டிருக்கும் இந்த படத்தில் மறைந்திருப்பது உண்மையில் ஆந்தையா? அப்படி அது ஆந்தை என்றால் அது எங்கே உள்ளது? என்பதை கண்டுபிடியுங்கள். மேலும் இந்த படத்தில் மறைந்திருக்கும் அந்த ஆந்தையை 30 வினாடிகளுக்குள் கண்டறிந்து விட்டால் உங்களின் மூளை புத்திசாலியான ஒன்று என்பதை நீங்கள் உணரலாம். ஆனால், இந்த படம் பலரை குழப்பத்தில் ஆழ்த்தி ஒன்றாக உள்ளது.



    இந்த படத்தில் உள்ள வனப்பகுதி காட்சி அழகாக இருந்தாலும் இதில் ஒரு ஆந்தை மறைந்துள்ளது. சில சமயம் நீங்கள் எதையாவது பார்த்து குழப்பமடைந்து கண்களைத் தேய்த்து மீண்டும் பார்க்க வேண்டும். அதற்கு காரணம், நீங்கள் ஒருவேளை ஆப்டிகல் மாயையால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். பெரும்பாலான ஆந்தைகள் இரவு நேரங்களில் வேட்டையாடுகின்றன. அவை அந்தி வேளையில் வேட்டையாடுவதையும் காணலாம். இங்கிலாந்தில், குட்டி ஆந்தை மற்றும் குட்டைக் காது கொண்ட ஆந்தைகள் போன்ற சில ஆந்தை வகைகள் பகல் நேரத்தில் வேட்டையாடுகின்றன என்று கூறப்படுகிறது.

    Also Read : ஆண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் வினோத திருடன்!

    மனிதர்களைப் போலவே ஆந்தைகளும் இரண்டு கண்களையும் நேராகப் பார்க்கின்றன என்று கூறப்படுகிறது. இது தொலைநோக்கி பார்வை (binocular vision) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தூரத்தை துல்லியமாக தீர்மானிக்க இந்த பறவைக்கு உதவுகிறதாம். ஆந்தையின் கண்கள் கிட்டத்தட்ட இருட்டாக இருக்கும்போது பார்க்க உதவும் வகையில் இருக்கின்றன.

    பறவை குடும்பத்தில் ஆந்தைகள் ஒரு சிறப்பு வாய்ந்த பறவை வகையாகும். இரவில் வேட்டையாடும் இரவுப் பறவையாக இருப்பதால் இது மிகவும் பிரபலமானது. மேலும் இவை பெரும்பாலும் தனியாக பறக்கின்றன, ஆனால் எப்போதாவது இவை கூட்டமாக பறக்கவும் செய்கின்றன. இப்படி கூட்டமாக பறப்பதை ஆங்கிலத்தில் "பார்லிமென்ட்" என்று அழைக்கின்றனர்.

    இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட ஆந்தையை தான் இந்த படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க போகிறீர்கள். ஒருவேளை, 30 வினாடிகளுக்குள் ஆந்தையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நாங்கள் அதை சில குறிப்புகளின் மூலம் உங்களுக்கு கண்டுபிடிக்க உதவுகிறோம்.



    படத்தில், ஒரு மரத்தின் வலுவான பட்டை உள்ளதை உங்களால் பார்க்க முடியும். இது ஒரு அழகான வனப்பகுதி காட்சியை நமக்கு தருகிறது. அதில் மையத்தை நன்றாகப் பாருங்கள். இப்போது, ​​மரத்தில் ஆந்தையைக் காண முடியும். அவ்வளவு தான்! இன்றைக்கான புதிர் முடிந்தது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி