Home /News /trend /

இந்த படத்தில் உள்ள தவறை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் மூளைக்கான சவால்

இந்த படத்தில் உள்ள தவறை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் மூளைக்கான சவால்

மூளைக்கான புதிர்கள் இன்று இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. இந்த வகையான புதிர்கள் நமக்கு உற்சாகத்தை தருவதோடு நம்மை யோசிக்கவும் வைக்கிறது. மூளைக்கான புதிர்கள் பலவும் வேடிக்கையான விளையாட்டுகள் போல இருப்பதால் இதை பலரும் ரசித்து விளையாடுகிறார்கள். ஆனால், இந்த புதிர்கள் பார்ப்பதற்கு ஒரு எளிய புதிர்கள் போன்று தோன்றினாலும் இவற்றை கண்டுபிடிப்பதில் அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இது தான் இவற்றில் உள்ள தந்திரமே!

இந்த மூளை விளையாட்டுகள் ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் இருப்பதால் பலரும் இதை விரும்பி விளையாடுகிறார்கள். இந்த புதிர்களைத் தீர்க்கும் போது, ​​நீங்கள் சிக்கலை சற்று வித்தியாசமாகவும், சிறந்த முறையில் பகுப்பாய்வும் செய்ய வேண்டி இருக்கும். மேலும் இதற்கான பதில் பல நேரங்களில் நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். எனவே இதற்கான பதில்களை கண்டறிய ஆக்கப்பூர்வமாக உங்கள் மனதைப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடினமான ஒரு புதிரை தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இதை உங்களால் வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சித்து பாருங்கள்.



இந்த படத்தில் மறைந்திருக்கும் தவறை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்களுக்கன புதிர். மிகவும் விழிப்புடன் இருப்பவர்கள் இந்தப் புதிரை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் இதற்கான பதில் மிகவும் எளிமையானது. இருப்பினும் இது தந்திரமான புதிர் என்பதால், இந்த புதிருக்கு பதிலளிக்கும் முன் படத்தை கவனமாகப் பார்க்க வேண்டும். இந்த புதிரை கண்டுபிடிக்க, பெரிய அளவில் கணக்கில் புலியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சற்று நிதானம் இருந்தால் போதும்.

Also Read : நீங்கள் நிற்கும் ஸ்டைல் மூலம் உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.!

மூளை டீஸர் பதில்..

இந்த மூளைக்கான புதிரில் உள்ள தவறை நீங்கள் அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இதற்கான பதிலை நாங்களே சொல்கிறோம். இந்த படத்தை பார்க்கும் போது முதலில், நீங்கள் அதிலுள்ள தவறை கவனிக்க மாட்டீர்கள். இந்த கேள்வியிலேயே அதற்கான பதில் இருப்பது தான் சுவாரஸ்யம். ஆம், 'Can you find the the Mistake?' என்பதில் தான் இந்த புதிருக்கான விடை ஒளிந்துள்ளது. இதற்கான பதில் "தி" (the) என்கிற ஒரு கூடுதலான வார்த்தை தான்.



இந்த புதிருக்கான பின்னணியில் உள்ள யுக்தி என்னவென்றால், ஒரு பிழை இருப்பதை நம் மூளை அறிந்தவுடன், அது இல்லாத பகுதியை ஸ்கேன் செய்கிறது. பலர் இந்த வண்ண எண்களில் உள்ள தவறைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அனைத்து எண்களும் சரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை உணர்ந்த பிறகு, எண்கள் எழுதப்பட்ட வண்ணங்களை மக்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். கடைசியாக, கேட்கப்பட்ட கேள்விக்குள் மறைந்திருக்கும் உண்மையான தவறுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். இப்படித்தான் இந்த புதிர் வேலை செய்கிறது.
Published by:Vijay R
First published:

Tags: Trends, Viral

அடுத்த செய்தி