ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

இந்த படத்தில் ஒளிந்துள்ள புலிகளை 11 வினாடிகளில் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion | இந்த ஆப்டிகல் மாயை புதிர் 11 வினாடிகளுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் உள்ள புலிகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பலருக்கும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். இருப்பினும் பல நேரங்களில் மிகவும் கடினமானவையானவும் தோன்றும். இந்த வகை ஆப்டிகல் மாயைகளின் அழகு என்னவென்றால், நமது கண்கள் மற்றும் மூளையுடன் தந்திரமான ஒரு விளையாட்டை விளையாடுகின்றன. அதாவது, நாம் பார்ப்பது யாவையும் நிஜம் என்று நம்ப வைக்கும் தன்மை இவற்றிற்கு உண்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்று கூறப்படும் ஒளியியல் மாயைகள் மனித மூளையின் செயல்பாட்டின் அளவை மதிப்பிட உதவுகின்றன.

பொதுவாக இவை பல வகைகளாக உள்ளன. உளவியல், அறிவாற்றல், விலங்குகள், பறவைகள் என பல வகையான ஒளியியல் மாயைகளை கூறலாம். இதை தவிர, ஆப்டிகல் மாயைகள் ஒரு குறிப்பிட்ட படத்துடன் தொடர்பு கொள்ளும்போது நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் வழி செய்கிறது. இது போன்ற புதிர் நிறைந்த சவாலான ஆப்டிகல் மாயை ஒன்றை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இதை எளிதில் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.

இன்றைய புதிர்

நீங்கள் ஆப்டிகல் மாயை புதிர்களைத் தீர்ப்பதை விரும்புகிறவரா? அப்படியென்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். இந்த ஆப்டிகல் மாயை புதிர் 11 வினாடிகளுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் உள்ள புலிகளைக் கண்டுபிடிக்க உங்களுக்கு சவால் விடுகிறது. இதுவரை நீங்கள் இது போன்ற புதிர்களை பார்த்திருக்க மாட்டீர்கள். இது சற்றே புதிதானது.

ஆப்டிகல் மாயை சவாலின் முக்கிய குறிக்கோள், உங்களின் உணர்திறன் அளவைப் புரிந்துகொள்வதோடு, உங்கள் கண்காணிப்புத் திறனையும் மேம்படுத்துவதாகும். மேலும் இது போன்ற புதிர்களை தீர்க்கும்போது, அட்ரினல் ஹார்மோனின் அளவு அதிகமாகி உற்சாகத்தை தரும். ஒளியியல் மாயைகள் பொதுவாக படங்களில் மறைக்கப்பட்ட விலங்கு அல்லது பொருளைக் கண்டுபிடிக்கும்படி கேட்கப்படும் புதிராக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், ஒரு பொருளாகத் தோன்றுவது உண்மையில் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவும் இருக்கும். சரி, நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்பதை அறிய விரும்புகிறீர்களா? இந்த ஆப்டிகல் மாயை சோதனையை இப்போதே முயற்சி செய்து பாருங்கள்.

Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!

மறைந்துள்ள புலிகள்

11 வினாடிகளுக்குள் படத்தில் மறைந்துள்ள புலிகளைக் கண்டறிவது எளிதான காரியம் அல்ல என்பது எங்களுக்கு புரிகிறது. ஆனால் அதுதான் ஆப்டிகல் மாயை சவால். புலிகள் எங்கே என்று அறிய முதலில் படத்தை மீண்டும் ஒரு முறை உற்று பாருங்கள். உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு புலிகள் மட்டுமே தெரிய வாய்ப்புண்டு. ஆனால், இன்னும் 2 புலிகளும் இப்படத்தில் உள்ளது. இவற்றில் ஒன்று வலதுபக்க இலைகளுக்குள் ஒளிந்துள்ளது. இன்னொரு புலியானது வானத்தில் உள்ள மேக கூட்டங்களுக்குள் உள்ளது.

அவ்வளவு தான், இப்படத்தில் உள்ள 4 புலிகளையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Tamil News, Trending