Home /News /trend /

இந்த படத்தில் பாம்பு தெரிகிறதா? 7 விநாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்.!

இந்த படத்தில் பாம்பு தெரிகிறதா? 7 விநாடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடிதான்.!

trending

trending

Optical illusion | இன்று நாம் பார்க்கப்போகும் ஆப்டிக்கல் இல்யூஷனில் புகைப்படத்தில் புற்களுக்கு நடுவே மறைந்திருக்கும் பாம்பை 7 விநாடிகளுக்கு கண்டுபிடிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்டிக்கல் இல்யூஷன்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது. கண்களுக்கு கூர்மையையும், மூளைக்கு கவனத்தையும் கொடுப்பதால் இந்த புதிர் விளையாட்டு அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது. சில நேரம் ஆப்டிக்கல் இல்யூஷனைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பினாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி மூளையை ஆழமாக சிந்திக்க வைப்பதால் இது மனதிற்கான ஒரு வகை பயிற்சி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித மூளையின் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளையின் சிக்கல்களை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவுகின்றன. மேலும் மனிதர்களின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தவும் சிறந்த வழியாக உள்ளது. தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது அல்லது எண்ணிக்கையை சொல்வது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட கண்ணையும், மூளையையும் குழம்ப வைக்க கூடிய அளவிற்கு மிகவும் சிக்கலான ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சிக்கலான படங்களில் மறைந்திருக்கும் உருவம் அல்லது பொருட்களை கண்டறிவது தொடர்பான ‘கண்டுபிடி’ வகை ஆப்டிக்கல் இல்யூஷன்கள் அதிக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. இன்று நாமும் அப்படியொரு ஆப்டிக்கல் இல்யூஷனைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம். கீழே உள்ள புகைப்படத்தில் புற்களுக்கு நடுவே மறைந்திருக்கும் பாம்பை 7 விநாடிகளுக்கு கண்டுபிடிக்க வேண்டும்.



இந்த புகைப்படத்தில், சில புற்கள் மட்டுமே உள்ள வறண்ட நிலத்தின் பிரகாசமான பகல் நேர காட்சி பதிவாகியுள்ளது. வெறும் புல் தானே என பலரும் கடந்து செல்லும் அதற்குள் தான், உயிரையே பலி வாங்கக்கூடிய பாம்பு ஒன்று மறைந்திருக்கிறது. புல்வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் அந்த பாம்பை 7 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்த பாண்டா கரடிகளுக்கு நடுவே மறைந்திருக்கும் நாய்க்குட்டியை 25 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

இதில் உள்ள பெரிய சவால் என்னவென்றால், மிகவும் கூர்மையான கண்காணிப்பு திறனும், கூர்மையான பார்வையும் இருந்தால் தான் 7 விநாடிகளுக்குள் ஒருவரால் பாம்பை கண்டுபிடிக்க முடியும் எனக்கூறப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் பாம்பை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?. அவ்வளவு தான் நேரம் முடிந்துவிட்டது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் பாம்பை கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கொடுத்த நேரத்துக்குள் எவ்வளவு முயன்றும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

Also Read : குழந்தை அழுவதை பார்த்து யானை செய்த செயலால் திக்குமுக்காடிய பார்வையாளர்கள்..

நேரமின்மையால் பாம்பை கண்டுபிடிக்க முடியாமல் பதில் தேடுபவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு தருகிறோம். மீண்டும் ஒரு டைம் படத்தை கவனமாக பாருங்கள். என்ன முயன்றும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்கள், விடையை கீழே படத்தில் வட்டமிட்டுள்ள இடத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.



படத்தின் வலது மூலைக்கு கீழ் உள்ள புற்களுக்கு சற்று மேலே பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் காணலாம். அதன் நிறமும் மண்ணின் நிறமும் ஒரே மாதிரியாக இருப்பதால் மேலோட்டமாக பார்க்கும் போது கண்ணில் புலப்படாமல் ஏமாற்றுகிறது. எனவே அதிக பொறுமையுடன் நன்றாக ஊற்றுப்பாருங்கள்...
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி