ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்தப் படத்தில் மறைந்துள்ள மீனை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.?

இந்தப் படத்தில் மறைந்துள்ள மீனை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.?

Trending

Trending

Optical illusion | இந்த படத்தில் இருக்கும் அனைத்து உருவங்களுமே பனிக்கரடி போல தோன்றினாலும், அதில் ஒரு உருவத்திற்கு அருகே மீன் இடம்பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் நமக்கு சவால் விடுப்பவையாகவும், நம் சிந்தனைக்கு வேலை கொடுப்பதாகவும் அமைகின்றன. குறிப்பாக நம் மனம் மிகவும் சோர்வாக உணரும் தருணங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களுக்கு விடை தேட தொடங்கினால் நமக்கு பொழுது போவதே தெரியாது.

  இந்தச் செய்தியில் உள்ள படத்திலும் அதுபோன்ற புதிர் மறைந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைத்து உருவங்களுமே பனிக்கரடி போல தோன்றினாலும், அதில் ஒரு உருவத்திற்கு அருகே மீன் இடம்பெற்றுள்ளது.

  நீங்கள் மேலோட்டமாக பார்த்தால் எல்லாமே பனிக்கட்டிகளாகவும், கரடிகளாவும் தான் தோன்றும். உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க முடியாது. பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை நீங்கள் பார்க்கும் முதல் கோணத்தில் ஒரு மாதிரியாகவும், மற்றொரு கோணத்தில் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

  மற்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களைப் போலவே இதுவும் சவால் மிகுந்தது என்றாலும் கூட, இதில் கொஞ்சம் குதூகலமான விஷயங்கள் நிறைந்துள்ளன. உங்கள் மூளையின் செயல்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் படத்தின் மூலமாக நீங்கள் எடை போட்டு தெரிந்து கொள்ளலாம்.

  15 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்:

  இந்தப் படத்தில் நீங்கள் வெகு நேர போராட்டத்திற்கு பிறகு மீனை கண்டுபிடிப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. பார்த்த 15 நொடிகளில் மீனை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் உங்கள் புத்திகூர்மைக்கு அழகு. ஆனால், உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை படித்துப் பார்த்து மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யவும்.

  Also Read : சுற்றி வளைத்து தொல்லை கொடுத்த 6 ஆண்களை ‘அடி பொளந்தெடுத்த’ சிங்கப்பெண்... வைரல் வீடியோ! 

  நெட்டிசன்களின் பதில்

  இந்தப் படத்தை வெகுநேரம் ஆராய்ந்த நெட்டிசன்கள் பலர், “அட என்னப்பா இது, எங்களை வைத்து காமெடி செய்கிறார் போல இருக்கிறது. இதில் மீன் இல்லவே இல்லை’’ என்று பதில் அளித்துள்ளனர். இன்னும் சிலரின் பதில் வேடிக்கையானது.

  இருந்த ஒரு மீனையும் பனிக்கரடிகள் தின்றுவிட்டன. ஆகவே படத்தில் தற்போதைக்கு மீன் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மீனை கண்டுபிடிப்பது எளிமையானதாக இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் இது சவால் மிகுந்த ஒன்றாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

  Also Read : உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் சவால்... இந்த போட்டோவில் 4-வது கைக்கு உரிய நபரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

  மீனு பெரியதா, சின்னதா, சொல்லுங்க…

  நீங்கள் குறிப்பிடும் மீன் சின்னதா, பெரியதா என்பதை முதலில் சொல்லுங்கள், பிறகு நான் கண்டுபிடிக்கிறேன் என்று மற்றொரு பதிவாளர் தெரிவித்துள்ளார். சரி இப்போது விடைக்கான குறியீடுகளை தெரிந்து கொள்ளலாம்.

  நீங்கள் தேடும் மீன் என்பது பனிக்கட்டிகளின் இடது ஓரத்தில் இருக்கிறது. இதிலும் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இடதுபக்கம் இரட்டையாக உள்ள பனிக்கரடிகளுக்கு அருகாமையில் பாருங்கள். நீங்கள் தேடும் மீன் அங்குதான் இருக்கிறது.

  Published by:Selvi M
  First published:

  Tags: Optical Illusion, Trending