Home /News /trend /

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உங்களால் ஒரு கோபமான மனிதரின் முகத்தை பார்க்க முடிகிறதா.? 

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உங்களால் ஒரு கோபமான மனிதரின் முகத்தை பார்க்க முடிகிறதா.? 

Optical Illusion

Optical Illusion

Optical Illusion | என்ன அலசி ஆராய்ந்தாலும் மற்றொரு முகத்தை பார்க்க முடியவில்லையே என வருத்தப்படுகிறீர்களா?... உங்களுக்கான தீர்வு இதோ.

புதிர் விளையாட்டுக்களை யாருக்கு தான் பிடிக்காது. மறைந்து கிடக்கும் ரகசியங்களை தோண்டி துருவி கண்டறிவதில் தானே சுவாரஸ்யமே அடங்கி இருக்கிறது. அப்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆர்வத்தையும் தூண்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

நமது மூளை மற்றும் கண்களின் திறனை பரிசோதிக்க ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பயன்படுகின்றன. மேலும் அதனை நீங்கள் பார்க்கும் கோணம் மற்றும் கண்களுக்கு முதலில் புலப்படும் படங்களை வைத்து நீங்கள் என்ன மாதிரியான குணநலம் கொண்டவர், பிரச்சனைகளை கையாளும் திறன், ஊற்றுநோக்கும் பண்பு, கண்காணிப்பு திறன் உள்ளிட்ட பல விஷயங்களையும் கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சில ‘இருக்கு ஆனா இல்ல’ வகையைச் சேர்ந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உங்களது தலையையே சுற்றவைக்கும். ஏனெனில் அவற்றில் மறைத்திருக்கும் உருவத்தை பார்த்த முதல் பார்வையிலேயே கண்டுபிடிப்பது எளிதில் நடக்காத காரியமாகும். ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒருவர் இயக்கம், ஓவியத்தில் மறைந்திருக்கும் மற்றொன்றின் படம், முப்பரிமாண வடிவங்கள் மற்றும் பிற உருவகப்படுத்துதலை கவனிக்க வேண்டும். எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு உருவமும் கூர்ந்து கவனித்தால் அதிலேயே வேறு ஒன்றின் உருவமும் ஒன்றாக இணைந்திருப்பதை காண முடியும்.

Also Read : உங்கள் பர்சனாலிட்டியை விளக்கும் புகைப்படம்..

நீங்கள் எதைக் கொடுத்தாலும் நாங்கள் டிகோட் செய்வோம் என ஆர்வத்துடன் இருக்கும் உங்களுக்காக அசத்தலான ஆப்டிக்கல் இல்யூஷனை கொண்டு வந்திருக்கிறோம். இன்று, ஹம்பர்டோ மச்சாடோவால் வரையப்பட்ட ஒரு அழகான தெளிவற்ற முக மாயை கொண்டு வந்துள்ளோம். சரியாக சொல்லுங்கள் கீழே உங்கள் கண்ணுக்கு தெரிவது கோபமான முகமா? அல்லது சோகமான முகமா?



மேலே உள்ள புகைப்படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், உங்கள் முதல் பார்வையில் அது ஒரு சோகமான மனிதனின் முகமாகத் தோன்றும். ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் கோபமான மனிதனின் முகத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா? என பாருங்கள். இந்த படத்தை முதலில் நீங்கள் கவனிக்கும் போது அலட்டிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் பெரிதாக இல்லையே என தோன்றலாம். அது தான் ஆப்டிக்கல் இல்யூஷன்களின் வெற்றியே. முதல் பார்வையில் உங்கள் கண்ணுக்குத் தெரியாத, நுட்பமான கூறுகள், அந்த ஓவியத்தை பல கோணங்களில் அலசி ஆராயும் போது, அதனுள் மறைந்திருக்கும் மற்றொரு முகத்தை நீங்கள் கண்டறிய முடியும்.

என்ன அலசி ஆராய்ந்தாலும் மற்றொரு முகத்தை பார்க்க முடியவில்லையே என வருத்தப்படுகிறீர்களா?... உங்களுக்கான தீர்வு இதோ.

Also Read : வியக்க வைக்கும் வைரல் ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட்..

இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் சிறிய தந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் மேலோட்டமாக பார்க்கும் போது ஓவியத்தில் கோபமான முகம் இல்லை என்ற எண்ணம் உங்களுக்கு வரக்கூடும். கோபக்காரனின் முகத்தைப் பார்க்க, முகத்தின் வலது பக்கத்தை மூடினால் போதும். இப்போது நீங்கள் ஒரு கோபமான மனிதனின் முகத்தை காணலாம். உடனே இந்த பிளாக் அண்ட் ஒயிட் ஓவியத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அதனை அவர்கள் இவ்வளவு நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என சவால் விட்டால் செம்ம ஜாலியாக இருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி