ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் நம் சிந்தனைத் திறனுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும். பொதுவாக பொழுதுபோக்கிற்காக இத்தகைய படங்களில் உள்ள புதிர் கேள்விகளுக்கு நீங்கள் விடை தேடலாம் அல்லது நமது சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் இதை நீங்கள் செய்யலாம்.
நம் மூளை சாதாரணமாக ஒரு படத்தை சட்டென்று பார்த்த உடன் என்ன சிந்திக்கிறது என்பதற்கும், உண்மையில் அங்கு என்ன இருக்கிறது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் அமைகிறது.
இதுபோன்ற படத்தை தான் டிக்டாக் பயனாளர் லெக்ஸி நடோலி என்பவர் வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு விலங்குகள் பனிக்கட்டி மலை மீது நிற்கின்றன. இந்தப் படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்பதை ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தான் கண்டறிய முடியும் என்று லெக்ஸி நடோலி தெரிவித்துள்ளார்.
எத்தனை குதிரைகள் இருக்கின்றன.?
இப்போது நீங்கள் படத்தை பாருங்கள். எல்லாமே ஒன்று போல காட்சி அளிக்கின்றன. இதில் எத்தனை குதிரைகளை உங்களால் அடையாளம் காண முடிகிறது என்பதை எண்ணி சொல்லுங்கள். சற்று குழப்பமாக இருக்கிறதா? இப்போது லெக்ஸி என்ன சொல்கிறார் என்பதை கவனித்துப் பாருங்கள்.
மொத்தம் 7 குதிரைகள்
படத்தில் மொத்தம் 7 குதிரைகள் இருக்கின்றன என்று லெக்ஸி தெரிவிக்கிறார். ஆனால், பெரும்பாலான நபர்களின் பார்வைக்கு 4 முதல் 5 குதிரைகள் மட்டுமே தென்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், இந்தப் படத்தை வரைந்த ஓவியரோ, அதில் 5 குதிரைகளை மட்டுமே தான் வரைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Also Read : 30 வினாடிகள் டைம்... இந்த படத்தில் ஒளிந்துள்ள பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
அப்படியானால் லெக்ஸி சொல்லும் கணக்குகள் தவறானதா என்ன? இந்தக் கேள்விதான் உங்களை இன்னும் குழப்பம் அடையச் செய்யும். அதற்கான பதிலை லெக்ஸி தருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சிலர் இந்தப் படத்தில் உள்ள குதிரைகளின் தலையை எண்ணி எத்தனை குதிரை இருக்கிறது என்ற பதிலை சொல்கின்றனர். ஆனால், படத்தில் தென்படும் குதிரைகளின் இதர பாகங்களையும் நீங்கள் கணக்கீடு செய்தால் உண்மையில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்ற விவரம் தெரிய வரும்.
Also Read : உண்மையில் இருப்பது என்ன.! முடிஞ்சா கண்டுபிடிங்க பார்க்கலாம்
லெக்ஸியின் வாதம் சரியானது என்று அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் நல அறிவியல் ஆய்வக அமைப்பின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நிபுணர் மற்றும் லெக்ஸி சொல்லும் எண்ணிக்கையை நெட்டிசன்கள் பலரும் ஏற்க மறுத்துள்ளனர். அதே சமயம், மற்றொரு நெட்டிசன் குறிப்பிட்டுள்ள பதிலில், குதிரைகளின் கால்களை நீங்கள் எண்ணிணால் படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்ற விவரம் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.