Home /News /trend /

25 விநாடிகள் தான் டைம்; இந்த படத்தில் மறைந்திருக்கும் 2-வது விலங்கை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

25 விநாடிகள் தான் டைம்; இந்த படத்தில் மறைந்திருக்கும் 2-வது விலங்கை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | போட்டோவை நீங்கள் மேலோட்டமாக பார்த்தால் ஒன்றும், நன்றாக உற்று நோக்கி, மூளையை கசக்கி பிழிந்தால் அதனுள் பல உருவங்களும் மறைந்திருப்பதை காணலாம்.

    இணையத்தில் பரவிக்கிடக்கும் ஏராளமான ஆப்டிக்கல் இல்யூஷன்களில் ‘இருக்கு ஆனா இல்ல’ என கண்கட்டி வித்தை காட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு என்றுமே தனி மவுசு உண்டு. ஏனென்றால் ஆப்டிக்கல் இல்யூஷனுக்காக வரையப்பட்ட ஓவியம் அல்லது போட்டோவை நீங்கள் மேலோட்டமாக பார்த்தால் ஒன்றும், நன்றாக உற்று நோக்கி, மூளையை கசக்கி பிழிந்தால் அதனுள் பல உருவங்களும் மறைந்திருப்பதை காணலாம். சில சமயங்களில் ஓவியங்களுக்குள் மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்க முடியாமல் இணையதளவாசிகள் திணறுவதும் உண்டு.

    புதிர் விளையாட்டைப் போல் சுவாரஸ்யமும், மூளைக்கு கண்ணுக்கும் ஒரே நேரத்தில் சவால்விடும் வகையிலும் இருப்பதால் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் நம்மை கவர்ந்திழுக்கின்றனர். ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உருவாக்கப்படுவதன் முக்கியமான நோக்கமே ஒருவர் எவ்வளவு புத்திசாலியாகவும் கவனிக்கக் கூடியவராகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. சில சமயங்களில் நீங்கள் முக்கியமானவற்றைப் பார்ப்பீர்கள், ஆனால் அளவு சிறியதாக உள்ளவற்றையோ அல்லது படத்தில் எங்காவது மறைந்திருக்கும் விஷயங்களையோ பார்க்க தவறுவீர்கள். இல்லையெல் கண்ணுக்கு முன்பே மறைந்திருக்கும் விஷயத்தை அலசி ஆராயமால் கோட்டை விடவும் நேரலாம்.

    Also Read : குடிப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நபர்.. 24 மணி நேரத்தில் 56 பப்களுக்கு விசிட்

    நாங்கள் இப்போது கொண்டு வந்துள்ள ஆப்டிக்கல் இல்யூஷனும் அப்படிப்பட்டது தான். உங்கள் கண் முன்னே இருக்கும் படத்திற்குள் மற்றொரு விலங்கும் ஒளிந்திருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் உங்கள் கண்ணுக்கு பட்டுப்போன மரத்திற்கு அருகே நரி ஒன்று நிற்பது பளிச்சென நிற்பது தெரியும். ஆனால் அந்த ஓவியத்திற்குள் மற்றொரு விலங்கும் மறைந்திருக்கிறது. அதனை வெறும் 25 விநாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.



    ஹெக்டிக்நிக் என்ற டிக்டாக் பிரபலம் வெளியிட்டுள்ள இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் இணையத்தையே கலக்கி வருகிறது. ஏனென்றால் இந்த படத்தில் மறைந்திருக்கும் மற்றொரு விலங்கு முற்றிலும் தனது நிறத்தை மாற்றிக்கொண்டு நன்றாக மறைந்திருப்பதால், பலரும் கண்டுபிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? படத்தில் இரண்டாவது விலங்கு உங்களுக்குத் தெரிகிறதா? அது எங்கே உள்ளது? சீக்கிரமாக கண்டுபிடியுங்கள் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது...

    இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்திற்குள் மறைந்திருக்கும் மற்றொரு விலங்கை கண்டறிய நீங்கள் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி, மூளையை கூர்மையாக்கி, உற்று நோக்க வேண்டும். பாருங்கள்... பாருங்கள்... அந்த இரண்டாவது விலங்கு எங்கே இருக்கிறது? இடது பக்கமா? வலது பக்கமா? அவ்வளவு தான் நேரம் முடியப்போகிறது. நன்றாக கவனமாக பாருங்கள்..

    அடச்சே! எவ்வளவு முயன்றும் 25 விநாடிகளுக்குள் இரண்டாவது விலங்கை கண்டுபிடிக்க முடியவில்லையா?. கவலையை விடுங்கள் வழக்கம் போல் நாங்கள் விடையை கண்டுபிடிக்க உதவுகிறோம். இலைகள் அற்ற அந்த மரத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். அதன் கிளையின் மீது மற்றொரு விலங்கு நின்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். கடைசியாக ஒருமுறை உற்றுப்பாருங்கள். என்ன இன்னும் கண்ணுக்கு புலப்படவில்லையா?. சரி விடுங்கள். அந்த விலங்கை கண்டுபிடிக்க நாங்கள் மார்க் செய்து காட்டியுள்ள இந்த புகைப்படத்தை பாருங்கள்.



    இப்போது தெரிகிறதா இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் மற்றொரு விலங்கின் புகைப்படம். இதை தான் கண்டுபிடிக்க முடியாமல் பலர் திணறி உள்ளனர்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி