ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடி பொம்மையை 12 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடி பொம்மையை 12 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்!

 கரடி பொம்மையை 12 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

கரடி பொம்மையை 12 வினாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்

Optical Illusion | நீங்கள் பார்க்கும் கோணம் மற்றும் கண்களுக்கு முதலில் நீங்கள் கண்டுப்பிடிக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களின் குணநலம், எப்படி நீங்கள் சவால்களைச் சமாளிக்கிறீர்கள் போன்ற பலவற்றைத் தெரிந்துக் கொள்ள முடியும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் போடுவது, வாட்ஸ்அப் சாட், வீடியோ கால் செய்வது போன்ற பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமில்லாமல் சில பயனுள்ள விஷயங்களையும் இணையவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் மூளை மற்றும் கண்களின் திறனை பரிசோதிக்கும் வகையிலான ஆப்டிகல் இல்யூசன் இணையத்தில் வைரலாகிறது. அதிலும் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று புதிர் கேள்விகளும் போடப்படும்.

இதை நீங்கள் பார்க்கும் கோணம் மற்றும் கண்களுக்கு முதலில் நீங்கள் கண்டுப்பிடிக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களின் குணநலம், எப்படி நீங்கள் சவால்களைச் சமாளிக்கிறீர்கள் போன்ற பலவற்றைத் தெரிந்துக் கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.இதுப்போன்ற ஒரு ஒளியியல் மாயைப் புகைப்படம் ஒன்று தான் இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்ன இருந்தது? நீங்களும் இந்த சவாலில் ஜெயிக்கிறீர்களாக? இல்லையா? என முயற்சி செய்துப்பாருங்கள்.. இதோ உங்களுக்கான ஒளியியல் மாயைப் புகைப்படங்கள்…

தற்போது உங்களுடைய கண்களுக்கு முன்னால் தெரியும் புகைப்படத்தில் சிறிய மற்றும் பெரியது என பல்வேறு அளவுகளில் காப்ஸ்யூல்கள் அதாவது மாத்திரைகள் உள்ளது. இதில் என்ன கேள்வி என கேட்கிறீர்களா? இதோ பார்த்துக்கொண்டிருக்கும் மாத்திரைகளுக்குள் ஒரு குட்டி பாண்டா அதாவது கரடிப்பொம்மை ஒன்று உள்ளது. மறைந்திருக்கும் இந்த பொம்மையை நீங்கள் 12 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் கண்டுபிடிக்க ஆரம்பிச்சாச்சா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே…

டிப்ஸ் 1 : முதலில் நீங்கள் புகைப்படத்தை நன்றாக உற்றுப்பார்க்கவும். சில மாத்திரை காப்ஸ்யூல்களுக்கு மத்தியில் ஆங்காங்கே சிறிய சிறிய பொம்மைகள் உள்ளது. அதனுள் தான் நாம் கண்டுபிடிக்க வேண்டிய கரடிப்பொம்மை ஒன்றும் உள்ளது.

இப்பவாவது கண்டுபிடித்து வீட்டீர்களா? இல்லையென்றால் இதோ மற்றொரு டிப்ஸ் உங்களுக்காக.

டிப்ஸ் 2: உங்களிடம் உள்ள புகைப்படத்தை வேறு எந்த சிந்தனை இல்லாமலும் நீங்கள் பார்க்க வேண்டும். படத்திற்கு மையப்பகுதிக்கு சற்று மேலே, இடது பக்கத்தை நன்றாக உற்றுப்பார்க்கவும். இப்போது நீங்கள் குட்டி பாண்டா ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும்.

இப்ப நீங்கள் நிச்சயம் கண்டுபிடிச்சிருப்பீர்கள்.. இந்த டிப்ஸ்கள் எதுவும் இல்லாமல் நீங்கள் குறிப்பிட்ட 12 வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்க முயற்சி வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் தான் ஜீனியஸ். இந்த சுவாரஸ்சியமான புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இதுப்போன்ற புகைப்படங்கள் நிச்சயம் மூளைக்கு சவால் விடும் வகையில் தான் அமைகிறது என்று கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். உங்களுக்கும் இதுப்போன்ற ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் கிடைத்தால் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து புதிர் விளையாட்டைத் தொடங்குங்கள்.

First published:

Tags: Optical Illusion, Trends, Viral