முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பனி மூடிய காட்டின் நடுவே ஓநாய்.. எங்கு என்று 18 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

பனி மூடிய காட்டின் நடுவே ஓநாய்.. எங்கு என்று 18 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

பனி மூடிய காட்டின் நடுவே ஓநாய்

பனி மூடிய காட்டின் நடுவே ஓநாய்

Optical Illusion | ஆப்டிகல் இல்யூஷன்கள் சோஷியல் மீடியாக்களில் எப்போதும் டிரெண்டிங்காக வலம் வர கூடியவை. நம் கண்கள் மற்றும் மூளைக்கு சவால் விடுபவையாக இவை இருக்கின்றன.

ஆப்டிகல் இல்யூஷன்களில் புதிர்கள் மற்றும் சவால்களும் கலந்து வருகின்றன. கடைசி வரையில் அவற்றில் மறைந்திருக்கும் எழுத்துக்களையோ அல்லது உருவங்களையோ கண்டறிய முடியாமல் பலரும் திணறுவார்கள். நம்முடைய கண்களையும், மூளையையும் ஒருங்கிணைத்து ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் ஒளிந்திருக்கும் புதிரை கண்டறிய அதை நன்றாக உற்று பார்க்கும் நேரமே, புதிரை கண்டறிவதற்கு தரப்பட்ட சவால் நேரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம்.

கீழே உள்ள பனி நிறைந்த காட்டை பாருங்கள். இந்த பனி காட்டில் ஒரு ஓநாய் மறைந்து இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் மறைந்திருக்கும் ஓநாயை நீங்கள் 18 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இந்த ஆப்டிகல் இல்யூஷன் மூலம் உங்களுக்கு கொடுக்கப்படும் சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் வெகு வேகமாக சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. மற்றும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்களால் மறைந்திருக்கும் ஓநாயை கண்டுபிடிக்க முடிந்தால் வெற்றி பெற்ற 1% மக்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். ஏனென்றால் கீழே படத்தில் அடங்கி இருக்கும் இயற்கை காட்சிகளால் இல்யூஷன் உருவாக்கப்படுகிறது. பனிப்பொழிவு இருப்பதால் படம் முழுவதும் ஓநாய்கள் இருப்பது போல நம் கண்களுக்கு தோன்றும். ஆனால் இதில் மறைந்து இருப்பது ஒரே ஒரு ஓநாய் தான்.

மேலே இருக்கும் இமேஜில் மறைந்திருக்கும் ஓநாயை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் படத்தில் எல்லா இடங்களிலும் பனி உள்ளது. இதுவரை சுமார் 1% மக்களால் மட்டுமே முடிக்க முடிந்த இந்த சவாலை, உங்கள் கண்களை படத்தின் எல்லா இடங்களையும் பார்ப்பதன் மூலம் முடிக்க வேண்டும் வெறும் 18 நொடிகளில். எனவே இது எளிதானது அல்ல. நீங்கள் இன்னும் குழப்பத்தில் இருந்தால், ஓநாய் மீது பனி இல்லை என்ற ஹின்ட்டை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

Also Read : மெட்ரோ ரயிலுக்குள் ‘ரீல்ஸ்’ ஷீட்.. சிக்கலில் சிக்கிய இளம்பெண்

இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? மேலும் சில ஹின்ட்ஸ்களை உங்களுக்கு இங்கே வழங்குகிறோம்.

* ஓநாய் உங்களைப் பார்த்து கொண்டிருக்கிறது

* மேலிருந்து கீழாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பார்க்க துவங்குங்கள்

* ஓநாய் பனியால் மூடப்படவில்லை என்று சொன்னோம் அல்லவா? இதன் அர்த்தம் மறைந்திருப்பது பனி ஓநாய் அல்ல, அதாவது அது வெள்ளை நிற ஓநாய் இல்லை.

இப்போது ஓநாயை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே உள்ள படத்தில் பதில் இருக்கிறது பாருங்கள்...

இந்த சவால் உங்கள் கண்கள் மற்றும் மூளைக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறோம். மீண்டும் வேறு ஒரு நல்ல ஆப்டிகல் இல்யூஷனுடன் உங்களை சந்திக்கிறோம்

First published:

Tags: Optical Illusion