Home /News /trend /

இந்த படத்தில் உள்ள வைர மோதிரத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

இந்த படத்தில் உள்ள வைர மோதிரத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

Trending

Trending

Optical illusion | வில்லியம் மே நிறுவனம் ரீடர்ஸ் டைஜஸ்ட் இணைய தளத்தில் பகிர்ந்துள்ள ஆப்டிக்கல் இல்யூஷனில், தோட்டத்தில் மறைந்துள்ள வைர மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

    ஒட்டுமொத்த இணையத்தையே ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் ஆட்டிப்படைத்து வருகின்றன. மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடிப்பது, கண்ணுக்கு தெரியாத விஷயத்தை அடையாளப்படுத்துவது, ஒரு ஓவியத்திற்குள் ஒளித்திருக்கும் பல உருவங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது என நமது அறிவாற்றல் திறனுக்கு செம்மையாக வேலை வைக்க கூடியவை என சோசியல் மீடியாவில் விதவிதமான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் கொட்டிக்கிடக்கின்றன.

    தற்போது அப்படி கண்ணுக்கும், மூளைக்கும் ஒரே நேரத்தில் வேலை வைக்க கூடிய சுவாரஸ்யமான ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படத்தை தான் நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம். தற்போது நாங்கள் கொண்டு வந்துள்ள தோட்ட புகைப்படத்தில் மறைந்திருக்க கூடிய வைர மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் உங்களுக்கான சவால்.

    வில்லியம் மே நிறுவனம் ரீடர்ஸ் டைஜஸ்ட் இணைய தளத்தில் பகிர்ந்துள்ள ஆப்டிக்கல் இல்யூஷனில், தோட்டத்தில் மறைந்துள்ள வைர மோதிரத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதனை கண்டுபிடிப்பதற்கான உங்கள் தேடலை எளிதாக்கும் சில குறிப்புகளையும் நாங்களே கொடுக்கிறோம். உதாரணமாக, மோதிரத்தின் வளையத்தின் நிறம் மஞ்சளாகவும், வைரம் வெள்ளை நிறத்திலும் காட்சியளிக்கும். என்ன தான் குறிப்புகளை கொடுத்தாலும் மக்கள் வைர மோதிரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுவதாக பதிவிடுவதை காண முடிகிறது.



     

    அப்படி வைர மோதிரத்தை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் திணற காரணம், அது ஒரு தோட்டம் என்பதும், அதில் எங்கு பார்த்தாலும் நிறைய பொருட்கள் இருப்பதுமே ஆகும். குறிப்பு இரண்டு என்னவென்றால், கேரட்டின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதனை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், மிகவும் கூர்மையான கண்காணிப்பு திறன் தேவை. இந்த புகைப்படத்தில் நிறைய கேரட்கள் உள்ளன, இது ஒரு நபரை முற்றிலும் குழப்பமடைய செய்ய போதுமானது.

    Also Read : இந்த படத்தில் உள்ள தவறை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் மூளைக்கான சவால்

    மோதிரம் இடது பக்கத்தில் உள்ள கேரட்டின் மீது வைக்கப்பட்டுள்ளது. இன்னும் துல்லியமான இடத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு, அதன் அருகில் ஒரு சூரியகாந்தி செடி மற்றும் லாரி உள்ளது என்ற குறிப்பையும் தருகிறோம்.



    இந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன்களில் இது மட்டுமே சிக்கலான மற்றும் சுவாரஸ்யமானது அல்ல. மற்றொரு கடினமான புதிரும் கொடுக்கப்பட்டுள்ளது. அலமாரிக்குள் மறைந்திருக்கும் அந்துபூச்சியை கண்டுபிடிக்க வேண்டும். இதில் என்ன கஷ்டமிருக்கிறது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் அலமாரி முழுவதும் ஏராளமான ஆடைகள் சிதறிக்கிடக்கின்றன. எனவே தான் அது கடினமானதாக காட்சியளிக்கிறது.



    தீவிர தேடுதலுக்கு பிறகு, தொப்பியின் பின்னால் மறைந்திருக்கும் அந்துப்பூச்சியைக் கண்டுபிடிக்க முடியும். படத்தைப் பலமுறை உன்னிப்பாகக் கவனித்தாலும், அந்துப்பூச்சியைக் கண்டறிவது மிகவும் கடினம். இது இடது பக்கத்தில் அமைந்துள்ள தொப்பியின் பின்னால் மறைத்துள்ளது.



    இந்த இரண்டு கடினமான புதிர்களை கண்டுபிடித்த பிறகும், உங்களுக்கு புதிர் விளையாட்டு மீதான ஆர்வம் மேலும், மேலும் அதிகரிக்கிறது என்றால், ரீடர்ஸ் டைஜஸ்ட் மூலம் உங்களுக்காக இன்னொன்று உள்ளது. இந்த மாயையில், நீங்கள் தோட்டத்தில் ஒரு அபிமான நாயைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்படி அந்த இணையதளத்தில் பல வித்தியாசமான விஷயங்களை நீங்கள் கண்டறியலாம்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி