Home /News /trend /

30 வினாடிகள் டைம்... இந்த படத்தில் ஒளிந்துள்ள பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

30 வினாடிகள் டைம்... இந்த படத்தில் ஒளிந்துள்ள பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

இன்று உங்களுக்கான ஆப்டிகல் இல்யூஷன் புதிர் கொஞ்சம் குழப்பமானது தான். அதே போன்று உங்களின் மூளை இதை கண்டுபிடிக்க முடியாமலும் போகும் அளவிற்கு கடினமானதும் கூட.

    மனித மூளை என்பது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கி உள்ளது. இன்றைய நவீன அறிவியல் முதல் பழங்கால வரலாறு வரை மனித மூளையின் செயல்பாடுகளை குறித்த பல விஷயங்களை வெளிப்படுத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை இன்றைய கால கட்டத்தில் உருவாக்கி வருகிறோம். மேலும் மூளையின் திறன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

    அந்த வகையில், சிலர் ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் திறனுக்கு முக்கிய பங்கு வகிப்பது மூளை தான். ஒருவரின் மூளை எந்த அளவிற்கு திறன் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை சில வேடிக்கையான பரிசோதனைகள் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். அதில் ஒன்று தான் ஆப்டிகல் இலுஷன் என்கிற படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அவற்றில் ஒளிந்துள்ள விஷயங்களை கண்டறிவது. பொதுவாக இந்த ஆப்டிகல் இலுஷன் படங்கள் பலரை ஆச்சரியத்தில் மூழ்த்தும் அளவிற்கு வித்தியாசமானதாக இருக்கும்.

    இன்று உங்களுக்கான ஆப்டிகல் இல்யூஷன் புதிர் கொஞ்சம் குழப்பமானது தான். அதே போன்று உங்களின் மூளை இதை கண்டுபிடிக்க முடியாமலும் போகும் அளவிற்கு கடினமானதும் கூட. இந்தப் படத்தில் குப்பைக் கிடங்கில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க வேண்டியது தான் உங்களுக்கான ஆப்டிகல் இல்யூஷன் புதிர். இந்த புதிர் உங்களின் கண்ணை ஏமாற்றி, உங்களால் முடியாதது போன்ற உணர்வை கூட ஏற்படுத்தலாம். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் மகிவும் சுவாரஸ்யமானவை, ஆனால் இதை சரியாகக் கண்டறிய பெரும் முயற்சி தேவை.



    இந்த கடினமான புதிரை முறியடிக்க இந்த படத்தை முதலில் உற்று பாருங்கள். பிறகு இதில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டறிய கண்களை ஓட்டம் விடுங்கள். இந்த குப்பை கிடங்கில் அதிக அளவில் குப்பை மட்டுமே இருப்பதால், புதிருக்கான விடையை அறிவது சற்று கடினம் தான். இந்த படமானது முதன்முதலில் Playbuzz தளத்தில் இருந்து பதிவிடப்பட்டது. தேவையற்ற பொருட்களின் குவியல்களில் பூனை ஊர்ந்து செல்வதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தனர்.

    Also Read : ஆண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் வினோத திருடன்!

    இந்த புதிரை பல நெட்டிசன்கள் பார்த்துவிட்டு விடை கிடைக்காமலே சென்றுள்ளனர். ஆனால் குப்பை கிடங்கில் அந்த பூனை இருப்பது உண்மைதான். இந்த குப்பைக் கிடங்கு ஆப்டிகல் இலுஷன் படத்தில், பழைய எஞ்சின்கள், துருப்பிடித்த உலோக வேலைப்பாடுகள் மற்றும் சில சீரற்ற முறையில் தூக்கி எறியப்பட்ட பொருட்கள் வரை பல பொருட்கள் காட்டப்பட்டுள்ளன, எனவே தான் இதில் உள்ள பூனையைக் கண்டறிவது எளிதானதாக இருப்பதில்லை.

    சரி, இவ்வளவு நேரத்திற்கு பிறகும் பூனையை உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், நாங்கள் சில குறிப்புகளை தருகிறோம். இந்தப் படத்தின் வலது பக்கத்திலோ அல்லது படத்தின் இடது பக்கத்திலோ பூனை இல்லை. அது படத்தின் மையத்தில் இருக்கிறது. ஆம், மீண்டும் படத்தை கவனமாக பாருங்கள். படத்தின் நடுவில் இடதுபுறத்தில் பூனை ஒளிந்துள்ளது



    ஒரு வழியாக புதிரை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம், விரைவில் அடுத்த புதிருடன் மீண்டும் வருகிறோம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி