Home /News /trend /

ரூ.10,000-க்கு கார் தயாரிக்க முடியுமா? நெட்டிசனின் சவாலுக்கு பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா

ரூ.10,000-க்கு கார் தயாரிக்க முடியுமா? நெட்டிசனின் சவாலுக்கு பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

Anand Mahindra | நெட்டிசனின் நையாண்டியைப் பார்த்து கோபம் கொள்ளாமல், சமயோஜிதமாக, அதே சமயம், நகைச்சுவையாக பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்திராவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

டீ கடை பெஞ்சுகள், வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஆலமரத்தடி போன்ற இடங்களில் அமர்ந்து அரட்டை அடிப்பவர்களை நீங்கள் பார்த்திருக்க கூடும். நடைமுறைக்கு ஒவ்வாத காரியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். நான் நினைத்தால் இமயமலையை என் கைக்குள் கொண்டு வருவேன், கடலில் நீந்தியே வெளிநாட்டுக்கு சென்று விடுவேன் என்று நீங்கள் நம்ப முடியாத விஷயங்களை பேசுவார்கள்.

இன்றைக்கு அதுபோன்ற பல வெட்டி வீணர்களின் புகலிடமாக சமூக வலைதளங்கள் மாறியுள்ளன. சமூக வலைதளங்களின் பலம் என்ன என்பதை சரியாகப் புரிந்து கொண்டு, அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வரும் பலர் இங்கே உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இந்த வீணர்களும் வலம் வருகின்றனர்.

நீங்களே கூட பல செய்திகள் அல்லது பதிவுகளின் கீழ் இவர்களது கமெண்ட்களை படித்திருக்கக் கூடும். எதற்கும் பயனில்லாத வகையில் விதண்டாவாதம் பேசிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம், இந்த வீணர்களுக்கு புரியும் மொழியில் சிலர் பதிலடி கொடுப்பதும் உண்டு. அத்தகைய சம்பவம் தான் சமீபத்தில் டிவிட்டரில் நடந்திருக்கிறது.

ஆனந்த் மஹிந்திராவுக்கு சவால்

டிவிட்டர் பயன்படுத்தும் பலருக்கும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கார் நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா எந்த அளவுக்கு துடிப்போடு செயல்பட்டு வருகிறார் என்பது தெரிந்திருக்கும். தொழில் தொடர்புடைய பொறுப்புகளுக்கு மத்தியில் சமூக அக்கறையுள்ள பல பதிவுகள் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர் அவர். குறிப்பாக, புத்தாக்க சிந்தனை கொண்ட பலரின் கருத்துக்களை தயங்காமல் பாராட்டக் கூடியவர் ஆனந்த் மஹிந்திரா.

Read More : மழையில் இந்த குடையை பயன்படுத்த முடியாது... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்


இத்தகைய மனிதரிடம், நெட்டிசன் ஒருவர், நடைமுறைக்கு ஒவ்வொத விஷயத்தை வைத்து வேடிக்கையாக சவால் விடுத்தார். அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு உங்களால் கார் தயாரிக்க முடியுமா என்று சவால் விடுத்தார் அந்த நபர்.

தகுந்த பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா

நக்கல் நையாண்டி செய்த அந்த பதிவரைப் பார்த்து ஆனந்த் மஹிந்திரா கோபம் எதுவும் அடையவில்லை. பதிலுக்கு அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்தார் அவர். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஆனந்த் மஹிந்திரா அளித்த பதிலில், “அதைவிட சிறப்பான விலையில் கூட நாங்கள் தயாரித்திருக்கிறோம். குறிப்பாக, இந்தக் காரின் விலை ரூ.1,500க்கும் குறைவுதான்’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் உள்ள மஹிந்திரா தார் மாடல் பொம்மை காரின் படத்தை பகிர்ந்து, ஸ்மைலி சிம்பிளுடன் முடித்துக் கொண்டார் ஆனந்த் மஹிந்திரா.மேன்மக்கள், மேன்மக்களே

இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் நல்லதொரு சைக்கிள் கூட ரூ.10 ஆயிரம் தாண்டி தான் விற்பனையாகி கொண்டிருக்கிறது. ஆனால், குசும்புக்காக அந்த விலையில் கார் தயாரிக்க முடியுமா? என்ற நெட்டிசனின் நையாண்டியைப் பார்த்து கோபம் கொள்ளாமல், சமயோஜிதமாக, அதே சமயம், நகைச்சுவையாக பதிலடி கொடுத்த ஆனந்த் மஹிந்திராவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Anand Mahindra, Trending, Viral

அடுத்த செய்தி