Home /News /trend /

”இது ஆப்பிளா.? இல்லை கேக்கா.? - வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள்.!

”இது ஆப்பிளா.? இல்லை கேக்கா.? - வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள்.!

ஆப்பிள் கேக்

ஆப்பிள் கேக்

Apple Cake | பிரபல சமையல் கலைஞர் நடாலி சைட்செர்ஃப் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இதில் எது நிஜ ஆப்பிள்? எது ஆப்பிள் கேக்? என்று வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள் என்று இணையவாசிகளுக்கு சவால் விட்டுள்ளது இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்றைக்கு சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் மக்களை அடிமையாக்கியுள்ளது. வாழ்வில் நடக்கும் சிறு சிறு விஷயங்களைக் கூட பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற இணையதள பக்கத்தில் பதிவிடுவதோடு எத்தனை லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்கள் நமக்கு கிடைத்துள்ளது? என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இது ஒரு புறம் இருந்தாலும் சமையல் குறிப்புகள், விதவிதமாக எப்படி சமைப்பது? தொடங்கி நமது அன்றாட வாழ்வில் உள்ள பொருள்களான லேப்டாப், ஸ்மார்ட்போன், பொம்மைகள் போன்று செய்யப்படும் கேக், சாக்லேட் போன்றவை இணையவாசிகளை வெகுவாக கவரும்.

இது போன்று தன்னுடைய கலை நயத்தைப் பயன்படுத்தி தத்ரூபமான கேக்குகளை வடிவமைப்பதில் உலக அளவில் பிரபலமான நடாலிசைட்செர்ஃப், தன்னுடைய ‘sideserfcakes’ என்ற இணையதளப் பக்கத்தில் நெட்டிசன்களுக்கு புதிர் போடும் வகையில் சில நிமிட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். எது உண்மையான ஆப்பிள்? எது போலியான ஆப்பிள் என தலைப்பிட்டு பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் வரிசையாக 3 ஆப்பிள்கள் இருப்பதை முதலில் பார்க்க முடியும். பின்னர் நீங்கள் இதில் எது கேக்? எது ஆப்பிள்? என வீடியோ முடிவதற்குள் கண்டுபிடியுங்கள் கூறப்பட்டிருந்தது. கத்தியை எடுத்து கேக்கை வெட்டும் போது எது கேக், எது ஆப்பிள் என்பதே நமக்குத் தெரிகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Sideserf Cake Studio (@sideserfcakes)






இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இதுவரை 7.3 லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதோடு சுமார் 58,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயம் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும், நடுவில் இருந்தது தான் கேக் ஆப்பிள் என நினைத்தேன் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் மற்றொரு யூசர் ஒருவர், அடுத்த முறை நிச்சயம் நான் கண்டுபிடித்துவேன் என்றும் கருத்துக்களை பகிர்ந்துவருகிறார்.

Also Read : காத்து வாக்குல இரண்டு காதல்... காதலனுக்காக சண்யைிட்ட இளம்பெண்கள்... காதலன் கொடுத்த ட்வீஸ்ட்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான நடாலி சைட்செர்ஃப், தன்னுடைய தனித்துவமான திறமையின் மூலம் தத்ரூபமாக கேக் வடிவமைப்பதில் உலகளவில் புகழ் பெற்று வருகிறார். கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாத அளவிற்கு வெங்காய வடிவத்தில் கேக், கண்கள், தலைமுடி, அழகான உடைகள் அணிந்து பார்ப்பதற்கு பெண் போன்று வடிவமைப்பில் இருக்கும் இளம் பெண்கள் போன்ற கேக், நாய் போன்ற கேக் போன்ற பலவற்றை செய்து அசத்தி வருகிறார். இப்படி வித்தியாசம் தெரியாத அளவிற்கு நடாலி தனது ஸ்பெஷல் கேக்குகளை செய்து வருகிறார். இவரின் கேக்குகள் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது
Published by:Selvi M
First published:

Tags: Cake, Trending

அடுத்த செய்தி