பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நமது மூளைக்கு அதிக வேலை தருபவையாக இருக்கும். பொதுவாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் என்பது இல்லாத ஒன்றை நம்ப வைத்து நமது மூளையை ஏமாற்ற கூடிய ஒரு வழியாக உள்ளது. இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும் ஒரு வகை மூளை புதிர். அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒளிந்துள்ள புதிரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்பதை பார்ப்போம்.
இந்த படத்தில் உள்ள உயரமான நபரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பொதுவாக ஆப்டிகல் மாயைகள் அற்புதமான முறையில் செயல்படுகின்றன. இதனால்தான் மனநல மருத்துவர்கள் கூட இவற்றை தனது நோயாளிகளுக்கு பரிசோதிக்க பயன்படுத்துகின்றனர். கண்ணின் உளவியல் பார்வையின் உளவியலில் இருந்து இது உருவாகுகிறது. ஒளியியல் அமைப்பின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, இது நாம் நினைப்பதை விடவும் பல அற்புதங்களை செய்யவல்லது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை பல ஆண்டு காலமாக புழக்கத்தில் இருந்து வருபவை. இவை மன அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பதால் அதிக சுவாரஸ்யத்தை தருகிறது. நமது கண்ணின் விழித்திரையில் ஏற்படும் விளைவுகளை இது பிரதிபலிக்கின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் என்பது மூளை தான் பார்ப்பதை எவ்வாறு உணர்கிறது என்பதில் செயல்படுகிறது. இது உங்கள் பழக்க வழக்கங்கள் மற்றும் புத்திசாலித்தனம் மற்றும் சில நேரங்களில் மூளையின் கண் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டது.
இவற்றின் அடிப்படையில் நீங்கள் இந்த படத்தை அணுகலாம். இந்த புதிரில் 90% பேர் தவறாக பதிலளித்துள்ளனர் என்பது முக்கியமான விஷயம். இந்த படத்தில் மூன்று துப்பாக்கி ஏந்தியவர்கள் தயாரான நிலையில், கண்காணிப்பு முறையில் நிற்பதைப் பார்க்க முடியும். கடைசியாக வலதுபுறம் நின்றவர் மிக உயரமானவராகத் தெரிவதாக உள்ளது. பலரும் இந்த பதிலை தான் சொல்வார்கள். ஆனால், இது தவறானது.
Also see... 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம்! க்ளைமேக்ஸ் தான் வேற
மூன்று ஆண்களில் மிக உயரமானவர் யார்?
இந்த மூவரில் உயரமானவர் யார் என்று உங்களுக்கு குழப்பமாக உள்ளதா? இதற்கான விடையை கண்டுபிடிக்க முதலில் இந்த படத்தை கூர்ந்து கவனித்து பாருங்கள். இங்கே ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளையை முதல் மனிதன் குள்ளமானவர் என்றும், நிற்கும் இரண்டாவது மனிதன் அவனை விட சற்று உயரமானவர் என்றும், மூன்றாவதாக உள்ள மனிதன் மிக உயரமானவர் என்றும் நினைக்க வைக்கிறது. இதில் தான் இதற்கான விடையும் ஒளிந்து இருக்கிறது.
ஆனால், இதற்கான விடை என்பது மிக சாதாரணமானது. ஆம், இந்த படத்தில் உள்ள எல்லா ஆண்களும் ஒரே உயரத்தில் தான் உள்ளனர். இதை புரிந்து கொள்ள இவர்களின் பின்னணியை மட்டும் பாருங்கள். அங்கு ஓடும் கோடுகள் வலது பக்கமாகச் சுருங்கி ஒரு மாயையான விளைவைக் கொடுக்கிறது. இதனால் தான் கடைசியாக உள்ளவர் உயரமானவராக தெரிகிறார். இது தான் இந்தப் படத்தை ஆப்டிகல் மாயையாக மாற்றியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion