Home /News /trend /

மனித முகத்தில் மறைந்திருக்கும் வார்த்தையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

மனித முகத்தில் மறைந்திருக்கும் வார்த்தையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் நம் சிந்தனைக்கு எந்த அளவுக்கு சவால் விடுப்பதாக அமைகிறதோ, அந்த அளவுக்கு ஏராளமான அர்த்தங்களை கொண்டதாக இருக்கிறது.

    ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் நம் சிந்தனைக்கு எந்த அளவுக்கு சவால் விடுப்பதாக அமைகிறதோ, அந்த அளவுக்கு ஏராளமான அர்த்தங்களை கொண்டதாக இருக்கிறது. நாம் சோர்வாக அமர்ந்திருக்கும் போது அல்லது மிகுந்த வேலைப் பளுவுக்கு இடையே நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைக்கும்போது நம் மனதுக்கு புத்துணர்ச்சி தருவதாக அமைவதுதான் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களாகும்.

    வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக கருதி ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களில் அடங்கியிருக்கும் புதிர்களை நீங்கள் கண்டறிந்துவிட முடியாது. இதில், உள்ள புதிர்களை கண்டறிவதற்கு மிகச் சரியான புத்திக்கூர்மை வேண்டும். உங்கள் மூளையின் செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு இது சரியான வாய்ப்பு ஆகும்.

    ஒவ்வொரு கோணங்களிலும் ஒவ்வொரு அர்த்தம் தரும்

    பொதுவாக ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு உருவத்தை பிரதிபலிப்பதாக அமையாது. அதனுள் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் ஒளிந்திருக்கும். நீங்கள் எந்த கோணத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்து அதில் தெரியும் உருவங்கள் மாறும். உங்கள் கண்கள் மிகச் சரியாக ஊடுருவி பார்க்கவில்லை என்றால் உங்கள் மனதை அது ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.

    ஒளிந்திருக்கும் வார்த்தையை கண்டுபிடிக்க முடியுமா.?

    முதல்முறை நீங்கள் இதைப் பார்க்கும் போது இது ஒரு சாதாரண புகைப்படமாகத் தான் தோன்றும். அதனுள் இடம்பெற்றிருக்கும் வார்த்தையை முதல் பார்வையில் நீங்கள் புரிந்து கொள்ள இயலாது. ஒரு மனித முகத்தை கொண்ட வரைபடத்தில் வார்த்தை இடம்பெற முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழக் கூடும். இதுதான் உங்கள் கேள்வி என்றால் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களின் பவர் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.



    மூன்று படங்களில் ஒன்றில் தான் வார்த்தை இருக்கிறது...

    இங்கு காண்பிக்கப்பட்டுள்ள 3 படங்களிலும் வார்த்தை கிடையாது. ஒரு படத்தில் மட்டுமே வார்த்தை இடம்பெற்றுள்ளது. நீங்கள் இதுவரை படித்திராத, கேள்விப்பட்டிராத வார்த்தையை கண்டுபிடிப்பது சற்று சிரமமான விஷயம் தான்.

    'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம்! க்ளைமேக்ஸ் தான் வேற

    உங்களுக்கான ஹிண்ட் இதோ

    ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் இருக்கும் வார்த்தையை இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்கான ஹிண்ட்கள் இதோ. படத்தை இடது பக்கத்தில் இருந்து பாருங்கள். அந்த வார்த்தைகள் கேபிடல் லெட்டர்களில் கிடையாது. லோயர்கேஸ் லெட்டர்களில் உள்ளது. ஆகவே, கேபிடல் லெட்டர்களை நீங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.



    இதுதான் விடை

    இப்போதும் உங்களால் சரியான விடையை கண்டுபிடிக்க இயலவில்லையா. சரி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை தெரிந்து கொள்ளுங்கள். முதல் எழுத்து மூக்கிற்கு மேலே தொடங்குகிறது அது எல். அதற்கு அடுத்ததாக ஐ, ஏ, ஆர் ஆகிய எழுத்துக்கள் இருக்கின்றனர். எல்லாவற்றையும் சரியாக கண்டுபிடித்து படித்தீர்கள் என்றால் லையர் (liar) என்ற வார்த்தை வரும். இப்போது இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் ஃபார்வேர்டு செய்து, இதில் உள்ள புதிரை கண்டுபிடிக்க கோரலாம்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion

    அடுத்த செய்தி