சமீபகாலமாக, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன.
புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரயங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன.
ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் அனைத்துமே திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும். ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அப்படிப்பட்ட ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விளக்கு ஒளியில் தாவரங்களின் பின்னணியைக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த படத்திற்குள் மறைந்திருக்கும் தவளையை வெறும் கண்களால் கண்டுபிடிக்க வேண்டுமென சவால் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிரை 30 வினாடிகளுக்குள் தீர்க்கும் சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா? 30 வினாடிகள் அல்லது ஒரு நிமிடத்திற்குள் தவளையைக் கண்டுபிடிக்கும் நபர்களுக்கு இதன் மூலம் மற்றொரு நன்மையும் காத்திருக்கிறது.
கீழே உள்ள படத்தில் ஒரு வெள்ளை நிற சுவரின் பின்னணியில் 3 மின் விளக்குகள் தொங்குகிறது. பிரகாசமான விளக்கு ஒளிக்கு பின்னால் செடி, கொடிகள் ஆகியவற்றை காணலாம். இந்த அழகிய பேக்ரவுண்டுக்குள் ஒரு தவளை திருட்டுத் தனமாக தன்னை மறைத்துக் கொண்டுள்ளது. விளக்கு ஒளி காரணமாக பேக்ரவுண்ட் முழுவதும் இருட்டாக தெரிவதால் நீங்கள் இருட்டில் மறைத்திருக்கும் தவளையை கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள். இது சற்றே கடினமானது தான் என்றாலும் உங்கள் கண்பார்வையை பரிசோதிக்க நல்ல பயிற்சியாக இருக்கும்.
படத்தை நீங்கள் நன்றாக உற்றுப் பார்த்து நன்றாக அலசி ஆராய்ந்தாலும், அதில் தவளை இல்லை என்றே உங்களுக்கு தோன்றும், ஏன் இது ஒரு ஏமாற்று வேலை என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் உற்று நோக்கினால், படத்தின் மேல் இடதுபுறத்தில் ஒரு தவளையின் சிறிய நிழல் இருப்பதை உங்களால் வெறும் கண்களால் கூட பார்க்க முடியும். தவளையை கண்டுபிடித்தவர்கள் தங்களது கண்பார்வை எவ்வளவு கூர்மையாக உள்ளது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.