ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் சவால்... இந்த போட்டோவில் 4-வது கைக்கு உரிய நபரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் சவால்... இந்த போட்டோவில் 4-வது கைக்கு உரிய நபரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

இணையத்தில் அடிக்கடி வெளியாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தற்போது நெட்டிசன்களுக்கு சவாலான விஷயமாக மாறிவிட்டன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இணையத்தில் அடிக்கடி வெளியாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தற்போது நெட்டிசன்களுக்கு சவாலான விஷயமாக மாறிவிட்டன. எனவே நெட்டிசன்களுக்கு ஆப்டிக்கல் இல்யூஷன் மேல் இருந்து வந்த தேடல், தற்போது வெறியாகவே மாறிவிட்டது என சொல்லலாம். ஏனெனில் இன்று புதிதாக என்ன ஆப்டிக்கல் இல்யூஷனை பார்ப்போம், அதில் இருக்கும் புதிரை எப்படி கண்டுபிடிப்போம் என இணையத்தில் தீவிரமாக தேடும் அளவிற்கு உள்ளனர்.

தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது அல்லது எண்ணிக்கையை சொல்வது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட கண்ணையும், மூளையையும் குழம்ப வைக்க கூடிய அளவிற்கு மிகவும் சிக்கலான ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நெட்டிசன்களின் பார்வை நாம் அவர்களை தெளிவாக குழப்பும் ‘இருக்கு ஆனா இல்ல’ வகை ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மீது திரும்பியுள்ளது. எனவே இன்று உங்களை தெளிவாக குழப்பக்கூடிய மற்றும் ஆச்சர்யமூட்டும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷனை கொண்டு வந்துள்ளோம்.

இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோவில், மலையேற்றத்தில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் குளிருக்கு இதமாக விஸ்கியை ஷேர் செய்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த போட்டோவில் ஆளுக்கொரு விஸ்கியை கையில் வைத்து ‘சியர்ஸ்’ என தட்டி கொள்கின்றனர். இவ்வளவு தானே இருக்கிறது, இதில் என்ன ஆப்டிக்கல் மாயை மறைந்திருக்க போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதை பகிர்ந்துள்ள நபர், இதில் மற்றொரு வேடிக்கையான விஷயம் மறைத்திருப்பதாக கூறியுள்ளார்.

மலையேறும் நபரான பேட்ரிக் டெல்வெர்னாய்ஸ் அமெரிக்காவிற்குள் அப்பாலாச்சியர்களின் மலையேற்றத்தை முடித்த பிறகு தனது மூன்று நண்பர்களுடன் மதுவை பகிர்ந்து கொள்ளும் போட்டோவை ஜாக்ரன் ஜோஷ் என்பவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை நீங்கள் மேலோட்டமாக பார்க்கும் போது 3 நபர்கள் மட்டுமே தெரிவார்கள், ஆனால் இதில் 4வதாக ஒரு கை மது பாட்டிலை நீட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் முதல் பார்வையில் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

ஆம், படத்தில் நான்காவது பாட்டிலை வைத்திருப்பவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க உங்கல் ஒட்டுமொத்த மூளையின் செயல்திறனையும் பயன்படுத்த ஆரம்பியுங்கள். அதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 11 வினாடிகள் மட்டுமே உள்ளன.

மோமோஸ் சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்! நடந்தது என்ன?

என்ன தலை சுற்றுகிறதா? அய்யோ பாவம்... இதோ உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை நன்றாக ஒருமுறை உற்றுநோக்கிவிட்டு, அவர்கள் பகிர்ந்து கொள்ளும் பாட்டில்கள் மீது கண்களை ஓடவிடுங்கள். மது பாட்டில்களை நன்றாக கவனித்தீர்கள் என்றால், இடதுபுறத்தில் கூடுதல் பாட்டிலைக் காணலாம், ஆனால் அதை வைத்திருப்பது யார்?. கண்டுபிடிக்க முடியவில்லையா?. இன்னும் கொஞ்சம் உங்களுக்கு உதவுகிறோம்.

பாட்டில்களை மீண்டும் ஒருமுறை பாருங்கள், படத்தின் இடதுபுறத்தில் கையுறை ஒன்று கண்ணுக்கு புலப்படுகிறதா?. இப்போது கையுறையைத் தொடர்ந்து ஒரு கையைக் காணலாம். நான்காவது கை பேக்ரவுண்ட் உடன் ஒத்துப்போய் உருமாற்றம் அடைந்துள்ளது. அதனால் தான் கண்டுபிடிக்க மிகவும் சிரமாக உள்ளது.

இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் முன்பை விட தீவிரமானதாக இருப்பதால், மூளைக்கு அதிக வேலை வைக்கிறது. காய்ந்த இலைகளின் குவியலில் பாம்பைக் கண்டறிவது முதல், காடுகளில் ஆந்தைகள் வரை, உருமறைப்பு ஒளியியல் மாயைகள் எப்போதுமே தலைசுற்ற வைக்க கூடியவை என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

First published: