Home /News /trend /

இந்த படத்தில் மறைந்துள்ள 1 - 10 வரையிலான எண்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

இந்த படத்தில் மறைந்துள்ள 1 - 10 வரையிலான எண்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

ஆப்டிகல் புகைப்படம்

ஆப்டிகல் புகைப்படம்

Optical Illusion | உங்கள் மனதில் தோன்றுவது என்ன இதெல்லாம் சாதாரண விஷயம் சீக்கிரம் 10 எண்களையும் கண்டுபிடித்துவிடலாம்.

    ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது தமிழில் ஒளியியல் மாயை என அழைக்கப்படுகிறது. இணையத்தில் இது போன்ற ஏராளமான தந்திரமான ஒளியியல் மாயைகள் அடுத்தடுத்து வைரலாகி வருகின்றன. உங்களுக்கு அதிக பொறுமையும், சிந்திக்கும் திறனும் இருந்தால் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தொடர்பான சவால்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். சோசியல் மீடியாவில் ஆப்டிக்கல் இல்யூஷன் தொடர்பாக புதுப்புது சவால்கள் வைரலாகி வருகின்றன.

    நெட்டிசன்களும் தங்களது மூளையை கசக்கி பிழிந்து விடையை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள் பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைகின்றன. இந்த இப்படங்களைக் கொண்டு உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும் என்றும் கூறுகின்றனர். அதாவது, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்கு தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேற மாதிரியாகவும் தோன்றும். இதை வைத்து உண்களுடைய குணாதிசயத்தை கண்டுபிடித்துவிடலாம்.

    சமீபத்தில் தொழில்நுட்பம் மற்றும் உளவியலின் முன்னேற்றத்துடன், மூளையின் குணாதிசயங்களின் தன்மையை சோதிப்பதற்காக அதிக அளவிலான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உண்மையில், இதுபோன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூட உதவுவதாக, உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    உங்கள் கால் விரல்களின் அமைப்பை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்!

    தற்போது நாம் டிக்-டாக்கில் வைரலாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்றைப் பார்க்கப்போகிறோம். purpzsaur என்ற டிக்-டாக் அக்கவுண்டில் இருந்து ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தில் மறைந்துள்ள 1 முதல் 10 வரையிலான எண்களை கடைபிடிக்க வேண்டுமென டிக்-டாக்கர் நெட்டிசன்களுக்கு சவால் விட்டுள்ளார். இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை சரியாக கண்டுபிடித்துவிட்டால், உங்கள் மனம் மற்றவர்களை விட வேகமாக வேலை செய்யக்கூடியது என கூறப்படுகிறது.

    கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். உடனே உங்கள் மனதில் தோன்றுவது என்ன இதெல்லாம் சாதாரண விஷயம் சீக்கிரம் 10 எண்களையும் கண்டுபிடித்துவிடலாம் என்பது தானே. ஆனால் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஏனெனில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷனை எதிர்கொண்ட மக்களில் பெரும்பாலானோர் 6,8,4 ஆகியவற்றை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் 1,2,3 ஆகிய எண்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர். மேலும் 1,2,3 ஆகிய எண்களை கண்டுபிடித்தால் மட்டுமே உங்களால் பிற எண்களை கண்டறிய முடியுமாம்.



    இந்த எண்கள் தொடர்பான வைரல் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன் பாவம் 1 முதல் 9 எண்களை கண்டுபிடித்துவிட்டராம். கடைசி எண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் தான் 1,2,3,4,6,7,8,0 ஆகிய எண்களை கண்டுபிடித்துவிட்டதாகவும், தன்னால் 5 மற்றும் 9 ஆகிய எண்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஒரே ஒருவர் மட்டுமே 10 எண்களையும் கண்டுபிடித்துவிட்டதாக பதிவிட்டு ஆச்சர்யம் கொடுத்துள்ளார். இப்போது உங்கள் முறை இந்த ஆப்டிக்கல் இல்யூஷனுக்குள் மறைந்திருக்கும் 1 முதல் 10 வரையிலான எண்களை கண்டுபிடிக்க முடிகிறதா? என்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Optical Illusion, Trends, Viral

    அடுத்த செய்தி