Home /News /trend /

இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்..

இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்..

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : இந்த மரக்குவியல்களில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்க முடிகிறதா ? கண்டுப்பிடிச்சிட்டா புத்திசாலி தான்..

சமீபகாலமாக, சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் தலை சுற்ற வைக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரு ஓவியத்தில் மறைத்திருக்க வேண்டியதை கண்டுபிடிப்பதாகட்டும் அல்லது அதில் உள்ள புதிருக்கு தீர்வு தருவதாகட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் எப்போதுமே நம் கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைகின்றன. புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரஸ்யங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் அனைத்துமே திறமையாளர்களால் வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகும்.

சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அப்படிப்பட்ட ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்றைய டிரெண்டாக இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் மற்றொரு பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது. சந்தன நிறத்தில் மரக் குவியல்களில் அதே நேரத்தில் ஒரு பூனை தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. உங்களுக்கு சவால் விடும் வகையில் இது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படமாக உள்ளது. உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது என்று நினைத்தால், பின்வரும் புகைப்படத்தில் பூனை எங்கு தூங்குகிறது என்பதை உதவிக் குறிப்பில்லாமல் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.

பலராலும் இந்த படத்தில் உள்ள பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. இருப்பதிலேயே மிகவும் கடினமான ஆப்டிக்கல் இல்யூஷன் புதிராக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். Reddit தளத்தில் முதலில் வெளியான இந்த புகைப்படம் பலரையும் குழப்பியுள்ளது. இது ஒரு பிரான்க் என்று நினைத்தேன் என்று ஒரு யூசர் தெரிவித்திருந்தார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, சவாலில் தொற்று விட்டேன், பல நாட்கள் ஆனது, கண்களை படத்தில் இருந்து எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன், இப்போது மறக்க முடியவில்லை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கமெண்ட் செய்து வந்தனர். இவர்களிடையே பொதுவாகக் காணப்பட்ட ஒரு விஷயம், யாருமே இந்த புகைப்படத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை.

also read : இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

சரி, நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?

இதுவரை முயன்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கான டிப்ஸ். பூனையின் கண்களை அடையாளமாக வைத்து தேட வேண்டாம்.

இப்போதும் உங்கள் கண்களுக்கு பூனை எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால், இரண்டாவது டிப்ஸ். பூனை அடுக்கி வைத்த மரக்கட்டைகளின் மேல் வரிசையில் எங்கிருக்கிறது என்று பாருங்கள்.



பலரும் பூனை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்காத சூழலில், இதை ஒரு போலியான இல்யூஷன் என்று கூறி வந்தனர். ஆனால், பூனை இருக்கும் இடம் குறிக்கப்பட்டு வெளியிடப்பட்டவுடன் தான் பலருக்கும் நம்பிக்கை வந்தது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion

அடுத்த செய்தி