சோஷியல் மீடியாக்களில் பல சுவாரஸ்ய விஷயங்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு சில விஷயங்கள் புதிர் மற்றும் சவால்களை கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒன்று தான் ஆப்டிகல் இல்யூஷன். எப்போதுமே நெட்டிசன்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன ஆப்டிகல் இல்யூஷன்கள். ஆன்லைன் யூஸர்கள் மத்தியில் விரைவாக வைரலாகிவிடுவதால் புதிது புதிதாக ஆப்டிகல் இல்யூஷன்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது பழைய ஆப்டிகல் இல்யூஷன்கள் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன. நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிக்க இவை ஒரு சிறந்த வழியாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நமது கவனிக்கும் திறனை வெளிப்படுத்த நல்ல வழியாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சிறந்த பொழுதுபோக்காகவும் ஆப்டிகல் இல்யூஷன்ஸ் இருக்கின்றன.
குறிப்பாக ஆப்டிகல் இல்யூஷன்களில் அடங்கி இருக்கும் புதிர்களை கண்டறிய சவால் விடுக்கப்படுவதால் அவற்றுக்கான பதிலை எப்படியாவது கண்டறிந்து விட வேண்டும் என்ற முனைப்பில் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன்கள் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து புதிரை தீர்க்கும் வகையிலான ஆப்டிகல் இல்யூஷன் ஒன்றை தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.
லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த லேட்டஸ்ட் ஆப்டிகல் இல்யூஷன் ஏழு இதயங்கள் மறைந்திருக்கும் ஒரு லேண்ட்ஸ்கேப் இமேஜ் ஆகும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜானது அழகிய நதி, மரங்கள், மலைகள், பாறைகள், இளஞ்சிவப்பு நிற பிரகாசமான வானம் மற்றும் அன்ன பறவைகள் இருக்கும் அழகான நிலப்பரப்பை காட்டுகிறது.
இதில் ஒரு காதல் ஜோடியும் இருக்கிறது. இந்த அழகிய இயற்கை காட்சிகளுக்கு நடுவே 7 இதயங்களும் மறைந்திருக்கிறது. இந்த இமேஜில் மறைந்திருக்கும் இதயங்களை வெறும் 15 நொடிகளில் கண்டறிய வேண்டும் என்பதே இந்த காதலர் தின ஸ்பெஷல் ஆப்டிகல் இல்யூஷன் உங்களுக்கு விடுக்கும் சவால் ஆகும். இப்போது மறைந்திருக்கும் இதயங்களை கண்டுபிடிக்க வேண்டிய ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை பார்க்கலாம்.
மேலே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆர்ட்டிஸ்ட்டான ஜிம் வாரனின் அழகிய ஓவியமாகும். இவர் சர்ரியலிஸ்டிக் ஓவியங்களுக்காக நன்கு அறியப்பட்டவர். இந்த இமேஜின் பல இடங்களில் மறைந்திருக்கும் 7 இதயங்களைக் கண்டறிய இந்த இமேஜ் உங்களுக்கு சவால் விடுகிறது. சவாலை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்கு 15 வினாடிகள் இருக்கிறது. எனவே இப்போது முயற்சித்து பாருங்கள்.
15 வினாடிகளுக்குள் சவால் விடுக்கப்பட்டுள்ள 7 இதயங்களை உங்களால் கண்டறிய முடியாவிட்டால் கவலை வேண்டாம். இந்த இல்யூஷன் இமேஜை முயற்சித்த பெரும்பாலானோரால் அனைத்து இதயங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி இப்போது நீங்கள் எவ்வளவு இதயங்களை கண்டறிந்தீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் மறைந்திருக்கும் அனைத்து இதயங்களும் எங்கே இருக்கின்றன என்பதற்கான விடையை கீழே வட்டமிடப்பட்டுள்ள இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
காதல் ஜோடிக்கு பின்னால் இருக்கும் நீர்நிலையில் ஒரு இதயமும், அன்னபறவைகள் இரண்டும் சேந்து ஒரு இதயமும், மரத்திற்கு அடுத்ததாக மேகம் ஒரு இதயமும், முன்புறத்தில் தரையில் கிடக்கும் பலூன் ஒரு இதயமும், வலது பக்கத்தில் இருக்கும் பாறை ஒரு இதயமும், மரக்கிளைகள் சேர்ந்து ஒரு இதயமும், பனி மூடிய மலையில் ஒரு இதயம் என மொத்தம் 7 இதயங்கள் மறைந்திருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.