முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஆப்டிகல் இல்யூசன்: வரிக்குதிரை கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிங்க... 10 செகண்ட்தான் டைம்..!

ஆப்டிகல் இல்யூசன்: வரிக்குதிரை கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிங்க... 10 செகண்ட்தான் டைம்..!

வரிக்குதிரை கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடியுங்கள்

வரிக்குதிரை கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடியுங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் வரிக்குதிரைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் புலியை 10 விநாடிகளுக்குள் கண்டறிய வேண்டும் என்பதே இன்றைய சவால்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடந்த சில மாதங்களாகவே இணையதளவாசிகளுக்கு ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆளுமை திறனை சோதிப்பது, நமது கண்ணையே நம்மாலேயே நம்ப முடியாத அளவுக்கு மறைந்திருக்கும் விஷயத்தை கண்டுபிடிக்க சவால் விடுவது, எண் கணித புதிர்களை கொடுத்து மூளையை குழப்புவது என விதவிதமான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன.

இப்படி பலவகையான புதிர்கள் வந்தாலும், ‘இருக்கு ஆனா இல்ல’ என கண்ணையும், மூளையும் ஒரே நேரத்தில் சோதிக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். ஏனெனில் இந்த மாதிரியான ஆப்டிக்கல் இல்யூஷன்களை மாத்த முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிட முடியாது. கொடுக்கப்பட்ட போட்டோவை அலசி ஆராய்ந்து பார்த்தாலே, புதிரை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு வெறும் 20 சதவீதம் மட்டுமே.

தற்போது உங்களுடன் கண்ணாமூச்சி ஆடக்கூடிய சுவாரஸ்யமான ஆப்டிக்கல் இல்யூஷனைத் தான் கொண்டு வந்துள்ளோம். வரிக்குதிரை கூட்டத்திற்குள் மறைந்திருக்கும் புலியைக் கண்டறிவதே இன்றைய சவால். இது பிரைன் டீசர் விளையாட்டு ஆகும். ஒரே மாதிரியான வரிக்குதிரை கூட்டத்திற்கு இடையே அதே போல் உடல் முழுவதும் கோடுகளுடன் இருக்க கூடிய புலியை பார்வையாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

‘இதென்ன பிரமாதம்... இதை விட பல ஸ்பெஷல் ஐயிட்டங்களை எல்லாம் பார்த்தாச்சே’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பச்சை புல்வெளிக்கு நடுவே இருக்கும் வரிக்குதிரைக்குள் கூட்டத்திற்குள் பதுங்கி இருக்கும் புலியை கண்டுபிடிக்க உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் வெறு 10 விநாடிகள் மட்டுமே. அதற்குள் நீங்கள் புலியை சரியாக அடையாளம் வேணும்.

 கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். இது காட்டில் தினமும் நடக்கும் ஒரு உணவுச்சங்கிலி போராட்டத்தை குறிக்கிறது. வரிக்குதிரைகள் பசிக்காக பசும் புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதனைக் கண்ட புலி, தனது உணவிற்காக வரிக்குதிரையை வேட்டையாட கூட்டத்திற்குள் புகுந்துள்ளது. தற்போது வரிக்குதிரை கூட்டம் வேட்டையாடும் மிருகத்திடம் இருந்து தப்பிக்க எந்த திசையை நோக்கி ஓடலாம் என நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்பான காட்சிக்கு இடையே புலி எங்கு மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களுக்கான 10 விநாடிகள் ஆரம்பமாகிவிட்டது... கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் புலியை கண்டுபிடிக்க முடியவில்லையா?, கவலை வேண்டாம்... நாங்கள் தரும் குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆப்டிக்கல் இல்யூஷன் குறிப்புகள்:

1. படத்தை முதலில் கீழிருந்து மேலாக பாருங்கள்.

2. குறிப்பாக போட்டோவின் மூலைகளை உற்றுப்பாருங்கள்.

3. விலங்குகளின் நிறங்கள் பொருந்துவதால், மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

படத்தை மேலிருந்து கீழாக பாருங்கள். அதன் இடதுபுறத்தில் அதிக வரிக்குதிரைகள் இல்லாத புல்வெளியில் புலி நின்று கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்... நீங்கள் இதுவரை புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், மேலே உள்ள படத்தை பார்த்து விடையை அறிந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Optical Illusion