Home /News /trend /

இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

காட்சி படம்

காட்சி படம்

Optical Illusion : இந்த புகைப்படத்தில் 6 வினாடிக்குள் 6 விலங்குகளையும் ஒருவர் கண்டுபிடித்து விட்டால் அவர் உண்மையிலேயே கில்லாடி தான்.

சோஷியல் மீடியாக்களில் எப்போதும் டிரெண்டிங்காக இருக்கும் சில விஷயங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு தனி இடம் உண்டு. அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகும் ஆப்டிக்கல் இல்யூஷன் சம்பந்தமான புகைப்படங்கள் நம் கண்கள் மற்றும் மூளைக்கு சவால் விடுப்பவையாக வலம் வருகின்றன. சில நேரங்களில் ஆப்டிக்கல் இல்யூஷன்களில் அடங்கி இருக்கும் புதிரை எளிதில் கண்டறிய முடிந்தாலும், பல நேரங்களில் பெரும்பாலானோருக்கு தோல்வியே கிடைக்கும். ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆப்டிகல் இல்யூஷ்ன்களில் மறைந்திருக்கும் விஷயங்களை கண்டுபிடிக்கும்படி சவால்கள் விடப்பட்டிருக்கும்.

நம்முடைய கண்களையும், மூளையையும் ஒருங்கிணைத்து ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் ஒளிந்திருக்கும் புதிரை கண்டறிய அதை நன்றாக உற்று பார்க்கும் நேரமே, புதிரை கண்டறிவதற்கு தரப்பட்ட சவால் நேரமாக இருக்கும். அபப்டிப்பட்ட ஆப்டிக்கல் இல்யூஷன் ஒன்றை தான் தற்போது நாம் இங்கே பார்க்க இருக்கிறோம். நீங்கள் இங்கே பார்க்க இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஆன்லைனில் உலகளாவிய சவாலாக மாறி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சவாலை ஏற்றுக்கொள்பவர் 6 வினாடிகளுக்குள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் உள்ள 6 விலங்குகளைக் கண்டுபிடிக்க வேண்டும். 6 வினாடிக்குள் 6 விலங்குகளையும் ஒருவர் கண்டுபிடித்து விட்டால் அவர் உண்மையிலேயே கில்லாடி தான்.

கீழே உள்ள படத்தில் ஒரு அழகான காட்டின் காட்சி இருக்கிறது. இதில் மறைந்திருக்கும் 6 விலங்குகளை தான் நீங்கள் 6 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். எனவே கீழே உள்ள படத்தை கவனமாக பாருங்கள். வினாடிக்கு 1 விலங்கை கண்டுபிடிப்பதற்கான உங்கள் நேரம் தொடங்குகிறது.



இப்போது நீங்கள் உற்று பார்த்ததில் 6 விலங்குகளை கண்டறிய முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 3 விலங்குகளையாவது இந்த 6 வினாடிகளில் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்கப்பா 6 இருக்கு கதை விடாதீங்க என்று நினைப்போருக்கு இந்த சிறிய அழகான இயற்கைக்காட்சியில் ஒரு முதலை, ஒட்டகம், முயல், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் ஒரு மான் உள்ளிட்ட 6 விலங்குகள் இருப்பது உண்மை தான் என உறுதி அளிக்கிறோம். சரி உங்களால் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியவில்லையா.? உங்களுக்கு அந்த விலங்குகள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை இங்கே வெளிப்படுத்துகிறோம்.

ஒட்டகம்:

இந்த இமேஜில் இருக்கும் மலைகளைப் பாருங்கள். நடுவில் மேலே உள்ள மரத்தின் இலைகளை முதுகு காட்டி திரும்பி நின்று உண்ணும் ஒட்டகத்தை நீங்கள் காணலாம்.



also read : உங்க கண் கூர்மைக்கான சவால்.. ஒளிந்துள்ள கம்பளிப்பூச்சியை 30 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்

பட்டாம்பூச்சி:

கீழே பூக்களுக்கு நடுவே இதோ இருக்கிறது ஒரு பட்டாம்பூச்சி.



முதலை:

இடதுபுறத்தில் இருக்கும் மரத்தின் மேற்புறம் செதில் செதிலாக இருப்பதை கவனித்தீர்களா? நீங்கள் செதில்களை பார்க்கிறீர்கள் இல்லையா? ஆம், அது ஒரு முதலை.



முயல்:

முயலை கண்டுபிடிக்க இப்போது இந்த இமேஜின் வலது பக்கம் உள்ள மரத்தின் மேலே உள்ள இலைகளை பாருங்கள்.



பாம்புகள்:

வலது பக்க மரத்தின் கீழ் காணப்படுவது புல் அல்ல. சில பாம்புகள், இப்போது பாருங்கள்..



மான்:

இதோ இங்கே வட்டமிடப்பட்ட பகுதியை பாருங்கள். மான் நிற்பது உங்கள் கண்களுக்கு புலப்படும்.



முதலில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் 30 வினாடிகளுக்குள் 6 விலங்குகளை கண்டறியும் சவாலுடன் வைரலாக தொடங்கினாலும், இதிலிருக்கும் சுவாரசியத்தை கூட்ட சில நெட்டிசன்கள் 6 வினாடிகளுக்குள் 6 விலங்குகளை கண்டறியும் சவாலாக இதை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion

அடுத்த செய்தி