Home /News /trend /

இவ்ளோ கூர்மையான மர கத்தியா! அசத்தியுள்ள ஆராய்ச்சியாளர்கள்..

இவ்ளோ கூர்மையான மர கத்தியா! அசத்தியுள்ள ஆராய்ச்சியாளர்கள்..

காட்சி படம்

காட்சி படம்

டேபிள் ஸ்டீல் கத்தியை விட, தங்களது மர கத்தி தோராயமாக மூன்று மடங்கு கூர்மையானது என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள் மேரிலாந்து பல்கலைக்கழக நிபுணர்கள்.

கத்திகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதகுலம் பயன்படுத்தி வரும் ஒரு பழமையான கருவியாகும். கூர்மையான கத்திகள் பொதுவாக ஸ்டீல் அல்லது செராமிக்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதிக வெப்பநிலையில் தீப்பிழம்புகளில் காட்டப்பட்டு கூர் தீட்டப்படும்.

மட்டன் வெட்டுவது முதல் காய்கறிகள் வெட்டுவது வரை அனைத்தையும் ஒரு ஸ்டீல் கத்திக்கு பதில், ஒரு மர கத்தியை வைத்து செய்யலாம் என்று யாராவது சொன்னால் நம் அதை நகைச்சுவையாக கருதுவோம். ஆனால் இப்போது அது நடக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் இப்போது கூர்மையான கத்திகளை தயாரிக்க ஒரு நிலையான முறையை உருவாக்கியுள்ளனர். மேரிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று கடினமான மரத்தால் செய்யப்பட்ட ஒரு கத்தியை உருவாக்கி உள்ளனர்.

தங்களது இந்த மர கத்தி ஸ்டீலில் தயார் செய்யப்படும் கத்தியை விட மிக கூர்மையானது என்று அவர்கள் கூறி உள்ளார்கள். இது பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மேரிலாந்து பல்கலைக்கழக நிபுணர்கள், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய கடினமான மரத்தை பயன்படுத்தி இந்த புதிய கத்தியை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

கூர்மையான கத்திகளை தயாரிக்க தாங்கள் கண்டறிந்துள்ள நிலையான செயல்முறை, மரத்தை ஏற்கனவே அது இருப்பதை விட கிட்டத்தட்ட சுமார் 23 மடங்கு கடினமாக்கும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் வழக்கமாக நாம் பயன்படுத்தும் டேபிள் ஸ்டீல் கத்தியை விட, தங்களது மர கத்தி தோராயமாக மூன்று மடங்கு கூர்மையானது என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள் மேரிலாந்து பல்கலைக்கழக நிபுணர்கள்.

கடினப்படுத்தப்பட்ட மர கத்தியை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் இது ஸ்டீல், செராமிக் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கத்திகளுக்கு மாற்றாக இருக்கும் என்றும் கூறி உள்ளனர். வலுவான மற்றும் கூர்மையான மர கத்தியை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் கெமிக்கல் ட்ரீட்மென்ட், வாட்டர் ரின்சிங் மற்றும் பாஸ்வுட் மீது கோல்டு & ஹாட் பிரஸ்சஸ் மற்றும் இரண்டையும் உள்ளடக்கிய செயல்முறையை பயன்படுத்தி உள்ளனர். பின்னர் அதன் நீர் எதிர்ப்பை அதிகரிக்க ஃபுட் கிரேட் மினரல் ஆயிலில் ஊற வைத்து, அந்த பொருளை கத்திகளாக நிபுணர்கள் செதுக்கி உள்ளனர்.

also read : நடுவானில் திடீரென திறந்த விமான கதவு...திக்திக் நிமிடங்கள்..அடுத்த நொடியே பயணிகள் செய்த காரியம்!

Researchers have developed a knife made of hardened wood that is 3x sharper than a dinner table knife. This cutlery is a promising alternative to knives made of steel, ceramic, and disposable plastic. Read more in @Matter_CP: https://t.co/HXew7JYgAm@ToLiTeng pic.twitter.com/PoCqEB8AXE

— Cell Press (@CellPressNews) October 20, 2021

மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் டெங் லி பேசுகையில், மரவேலை மற்றும் இசைக்கருவிகளின் மேல் உடலை உருவாக்க பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு மென்மையான மரமான Basswood, எங்களை பல கட்ட ப்ராசஸிற்கு பிறகு அதன் உயர் செயல்திறனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

எனினும் எங்களது ஆய்வில் பயன்படுத்தப்படும் உற்பத்தி உத்தி மற்ற வகை மரங்களுக்கும் பொருந்தும். எங்களது தொழில்நுட்பம் மூலம் சாதாரண மரத்தை கடினமான தன்மை உடைய மரமாக மாற்ற முடியும். இந்த புதிய கத்தி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு மற்றும் மற்ற கத்திகளை விட சிறந்தது என்றார். வெள்ளரிகள், கேரட், வெங்காயம் மற்றும் தக்காளி, மாமிசம் உள்ளிட்ட பல பொருட்களை வெற்றிகரமாக வெட்டியது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய மர கத்தி.

also read : பாரம்பரிய முறையில் IT அலுவலகம்.. அசத்தும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

மரத்தின் முக்கிய உறுப்பான செல்லுலோஸ் பல மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களை விட (மெட்டல் , செராமிக்ஸ்)சிறந்த வலிமை அடர்த்தி விகிதத்தைக் கொண்டுள்ளது. மரத்தின் 40 - 50 சதவிகிதம் மட்டுமே செல்லுலோஸால் ஆனது. மீதமுள்ளவை ஹெமிசெல்லுலோஸ் மற்றும் லிக்னின் எனப்படும் பைண்டரை கொண்டுள்ளது. இது மரத்தின் வலிமையைக் குறைக்கிறது.

இதை நிவர்த்தி செய்ய, செல்லுலோஸ் கட்டமைப்பைப் பாதுகாக்கும் போது மரத்தின் பலவீனமான கூறுகளை அகற்ற இரண்டு-படி செயல்முறையை வகுத்ததாக விளக்கி உள்ளார் டெங் லி. மேலும் தங்களது கத்தியையும் கழுவலாம். ஏனென்றால் இது டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் சக்தி கொண்டது. மற்ற மரங்களைப் போல தூசி அதில் ஒட்டாது. எனவே, உணவுப் பொருட்களில் தொற்று ஏற்படும் அபாயம் மிகக் குறைவு. இதன் ஷார்ப்னஸ் குறைந்தால் சாதாரண கத்தியை போல கூர்மைப்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி