Home /News /trend /

இந்த புகைப்படத்தில் உள்ள துப்பாக்கி சுடும் வீரரை 30 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.? இதுவரை 1% பேர்தான் கண்டுபிடித்துள்ளனர்.!

இந்த புகைப்படத்தில் உள்ள துப்பாக்கி சுடும் வீரரை 30 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.? இதுவரை 1% பேர்தான் கண்டுபிடித்துள்ளனர்.!

Trending

Trending

Optical illusion | ஒளியியல் மாயை என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை சமீப வாரங்களாக இன்டர்நெட்டில் மிகவும் பரவலாக வைரலாகி வரும் ஒன்று. இவை பல நேரங்களில் மிகவும் வியப்படைய மற்றும் ஆச்சரியபட வைப்பதாகவும் இருக்கிறது.

    பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை நம்முடைய ஒட்டுமொத்த புத்திசாலித்தனத்தை சோதிக்கிறது. தவிர நம் ஆளுமையின் வகையை சோதித்து அளவிட வைக்கிறது. ஒரு சில ஆப்டிக்கல் இல்யூஷன்கள் நம் வாழ்க்கையில் மற்றும் ஆழ்மனதில் மறைந்திருக்கும் அச்சங்கள், பாதித்திருக்கும் கவலைகள் மற்றும் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவைகளாகவும் இருக்கின்றன.

    குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆப்டிகல் இல்யூஷன்கள் நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை பற்றி நிறைய வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நாங்கள் ஒரு புதிய ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்களை கொண்டு வருகிறோம். இமேஜ்கள் மற்றும் GIF-கள் மூலம், இல்யூஷன்கள் எப்போதும் தவறாக வழிநடத்துவதில்லை, சில சமயங்களில் அவை சரியான திசைகளுக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே இன்றைய இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை முயற்சிக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை மிக மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது ஒரே நேரத்தில் உங்கள் உணர்வு மற்றும் காட்சி அமைப்புக்கு சவால் விடும் ஒன்றாகும்.

    இந்த ஆப்டிகல் இல்யூஷன் உண்மையிலேயே மிகவும் சவாலானது. ஏனெனில் நீங்கள் இந்த இமேஜில் மறைந்திருக்கும் ஒரு ஸ்னைப்பரை (துப்பாக்கி சுடும் வீரரை) உங்களால் முடிந்தவரை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். பாறைகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒரு துப்பாக்கி சுடும் வீரரை (Sniper) கண்டுபிடிக்க உங்களுக்கு சுமார் 30 வினாடிகள் மட்டுமே தருகிறது இந்த ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்.



    இந்த இல்யூஷன் நாதன் டேனியல்ஸ் (Nathan Daniels) என்ற யூஸரால் TikTok-ல் ஷேர் செய்யப்பட்டது. இந்த இல்யூஷன் அடங்கிய குறுகிய வீடியோ கிளிப் ஒரு பாறை நிலப்பரப்பைக் காட்டுகிறது. "இந்த பனி மூடிய பாறைகளில் ஒரு ஸ்னைப்பர் மறைந்துள்ளார். "உங்களால் அந்த துப்பாக்கி சுடும் வீரரைக் கண்டுபிடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் Nathan. இந்த ஷார்ட் வீடியோவை பார்க்கும் சுமார் 1 சதவீதம் பேர் மட்டுமே பாறைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் ஸ்னைப்பரை கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    Also Read : அது எப்படி இந்த பொண்ணுக்கு மட்டும் 3 கால் இருக்கு... தலை சுற்ற வைத்த போட்டோ! 

    நீங்கள் இந்த வீடியோவை பாஸ் செய்து கூட உற்று பாருங்கள் அல்லது ஸ்கிரீனின் பிரைட்னஸை கூட அதிகரித்து வைத்து பாருங்கள். ஸ்னைப்பரை கண்டுபிடிப்பது கடினமே. ஆனால் இந்த வீடியோவின் 18-வது வினாடியில் பாறைகளுக்கு அருகே மறைந்திருக்கும் ஸ்னைப்பர் வெளிப்படுகிறார். பார்க்கும் நமக்கு வியப்பு தான் மிச்சம். ஏனென்றால் நாம் அவ்வளவு நேரம் உற்று உற்று பார்த்த ஒரு பாறையின் மேல் தான் சாய்ந்து கொண்டு மறைந்திருக்கிறார் அந்த ஸ்னைப்பர்.



    இந்த ஆப்டிகல் இல்யூஷன் அடங்கிய டிக்டாக் வீடியோ ஷேர் செய்யப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் தங்கள் ஆச்சரியத்தை கமெண்ட்ஸ் பாக்ஸில் வெளிப்படுத்தினர். ஒரு யூஸர் "பாறையின் பின்னால் மறைந்திருக்கும் துப்பாக்கி சுடும் வீரரை நாம் எப்படி கண்டுபிடிப்பது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு யூஸர் மறைத்திருக்கும் ஸ்னைப்பரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றார். மற்றொருவர் சுமார் 95 சதவிகிதம் ஒரு பாறைக்குப் பின்னால் குறிப்பிட்ட ஸ்னைப்பர் மறைந்து இருக்கிறார், எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Optical Illusion, Trending

    அடுத்த செய்தி