Home /News /trend /

துல்லியமான கண்பார்வை கொண்டவரா? இந்த படத்தில் மறைத்திருக்கும் 25 விலங்குகளை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

துல்லியமான கண்பார்வை கொண்டவரா? இந்த படத்தில் மறைத்திருக்கும் 25 விலங்குகளை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Trending

Trending

Optical illusion | கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம், 16ம் நூற்றாண்டின் பாணியில் வடிவமைக்கப்பட்டது. இதனை இத்தாலிய கலைஞர் கியூசெப் ஆர்கிம்போல்டோ என்பவர் வரைந்துள்ளார்.

சமீப காலமாகவே ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இணையத்தை ஆளுகின்றன. மூளை மற்றும் கண்களுக்கு வேலை கொடுக்க கூடிய ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்துள்ள புதிர்களை தீர்ப்பது என்பது மிகவும் சுவாரஸ்மானது. எனவே நேரத்தை செலவழித்து ஆப்டிகல் இல்யூஷன்களில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பதை நெட்டிசன்கள் பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக ஒரு புகைப்படம் அல்லது ஓவியத்திற்குள் மறைத்திருக்கும் பல உருவங்களை சரியாக கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலானது.

தற்போது அப்படியொரு ஆப்டிகல் இல்யூஷனை தான் கொண்டு வந்துள்ளோம். கீழே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் ஒரு மனிதனின் முகத்தையோ அல்லது சில விலங்குகளையோ பார்க்கலாம். ஒன்றிரண்டு மட்டுமல்ல, துல்லியமாகச் சொல்வதானால், இந்த படத்திற்குள் 25 விலங்குகளின் உருவங்கள் அடங்கியுள்ளன.

இந்த சவாலை மேலும் சுவாரஸ்யமாக்கும் விதமாக 75 விநாடிக்குள் 25 விலங்குகளையும் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது உலகளாவிய சவாலை முடிக்க உங்களுக்கு 1 நிமிடம் 15 வினாடிகள் உள்ளன. உங்களால் அவ்வாறு செய்ய முடிந்தால், உலக மக்கள்தொகையில் 0.1 சதவீத மக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ள ஆப்டிகல் இல்யூஷனில் நீங்களும் கண்டுபிடித்தவராக மாறுவீர்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம், 16ம் நூற்றாண்டின் பாணியில் வடிவமைக்கப்பட்டது. இதனை இத்தாலிய கலைஞர் கியூசெப் ஆர்கிம்போல்டோ என்பவர் வரைந்துள்ளார். உணவுப் பொருட்களிலிருந்து மனித தலைகளை உருவாக்குவதில் வல்லவரான அவர், இந்த ஆப்டிகல் இல்யூஷன் உருவத்தை பல வகையான விலங்குகளின் உருவத்தை கொண்டு நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்.



இந்த ஆப்டிகல் இல்யூஷனை மேலோட்டமாக பார்க்கும் போது உங்களது கண்களுக்கு,

மயில், குதிரை, திமிங்கிலம், கரடி, கங்காரு, புலி, ஒராங்குட்டான், கழுகு, முயல், ஆமை, குதிரை, நரி

Also Read : இந்த படத்தில் இருக்கும் 16 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

மேலும் கழுகு போல் பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு பார்ப்பவர்களால், ஸ்லோத், வெட்டுக்கிளி, மக்காவோ மற்றும் நத்தை போன்றவற்றையும் கண்டுபிடிக்க முடியும். இந்த விலங்குகள் மனித உருவத்திற்காக பயன்படுத்தியுள்ள வண்ணங்களுடன் இரண்டற கலந்துள்ளதால் நம் கண்களை ஏமாற்றுகின்றன.

படத்தில் பல்லியுடன் யானை மற்றும் டால்பினை ஒருவர் எளிதாகக் காணலாம். மனிதனின் மூக்கில் முயலுக்கு சற்று மேலே படத்தின் மையத்தில் மக்கா வகை கிளியையும் பார்க்க முடியும்.

Also Read : கட்டிப்பிடி வைத்தியத்தில் ’கல்லா’ கட்டும் இளைஞர்.. ஒரு மணி நேரத்தில் ரூ.7000 சம்பாதிக்கிறார்

இப்போது மனிதனின் கண்கள் என்னவென்று சுற்றிப் பாருங்கள். செம்மறி ஆடு போன்ற உயிரினம், ஒரு வான்கோழி மற்றும் ஒரு பெண் பூச்சி அல்லது கரப்பான் பூச்சியுடன் ஷெல் செய்யப்பட்ட விலங்குகளை நீங்கள் காணலாம். நட்சத்திர மீனும் உண்டு. யானையின் பின்னால் ஒரு பாம்பு பதுங்கி உள்ளது மற்றும் முகத்தின் மறுபுறம், நீண்ட கொக்கு கருப்பு நிறத்தில் உள்ளது.

75 வினாடிகளுக்குள் 25 விலங்குகளையும் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்களா என்பதை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி