Home /News /trend /

தாகத்தை தணிக்க கரடி சிறுநீர் கலந்த நீரை கொதிக்க வைக்க முயற்சித்த பெண் - கலிபோர்னியா காட்டு தீ-க்கு காரணமா?

தாகத்தை தணிக்க கரடி சிறுநீர் கலந்த நீரை கொதிக்க வைக்க முயற்சித்த பெண் - கலிபோர்னியா காட்டு தீ-க்கு காரணமா?

மதிரி படம்

மதிரி படம்

ஆபத்திற்கு பாவமில்லை என்று தாகத்திற்காக கரடியின் சிறுநீர் கலந்த தண்ணீரை தீ மூலம் கொதிக்க வைத்து குடிக்க நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடு எரிந்து சாம்பலாகி உள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இதில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொடூர காட்டு தீயிலிருந்து உயிர் தப்பிக்க காடுகளுக்கு அருகில் குடி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காட்டு தீயை அணைக்க எண்ணற்ற தீயணைப்பு வீரர்கள் பல நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே இந்த காட்டு தீ பருவநிலை மாற்றங்கள் காரணமாகவோ அல்லது இயற்கையாகவோ ஏற்படவில்லை என்றும். ஒரு இளம்பெண் தான் இந்த காட்டு தீ ஏற்பட காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் தொடர்பு தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள 30 வயதான அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா என்ற பெண்ணின் மீது தான் காட்டை பற்ற வைத்த புகார் கூறப்பட்டு இருக்கிறது.

முன்னாள் வனவியல் மாணவியான தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டை அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா மறுத்துள்ளார். வனத்துறை அதிகாரிகளின் விசாரணையின் போது தான் குறிப்பிட்ட காட்டு பகுதியில் மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்த போது மிகவும் தாகம் எடுத்ததாகவும், அப்போது கரடியின் சிறுநீர் கலந்த தண்ணீர் தேங்கி இருக்கிறது என்று தான் நம்பிய ஒரு மிக சிறிய இடத்தை கண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆபத்திற்கு பாவமில்லை என்று தாகத்திற்காக கரடியின் சிறுநீர் கலந்த தண்ணீரை தீ மூலம் கொதிக்க வைத்து குடிக்க நினைத்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் வேறுவழியின்றி அதை அப்படியே குடித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து மலையேற்றத்தை தொடர்ந்தேன் என்றும் கூறி இருக்கிறார். எனினும் காட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் நடமாடி வருவதாக அங்கிருந்த சில தொழிலாளர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Also read... வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் - காப்பாற்றிய டிரைவர்!

அவர்கள் வருவதற்குள் காட்டின் சில பகுதியில் தீ பற்ற துவங்கி இருக்கிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள், அலெக்ஸாண்ட்ரா சூவர்னேவா இடுப்பில் மாட்டியிருந்த பையை காட்ட சொல்லி கேட்டனர். அதை சோதித்த போது சில கார்பன் டை ஆக்சைடு குப்பிகள் , ஒரு லைட்டர், புகைபிடிக்க உதவும் ஒரு பொருள் உள்ளிட்டவை இருந்துள்ளது.

மேலும் அவரை நேரில் பார்த்த சாட்சிகள் சிலர் தீப்பிடித்த சம்பவத்தன்று அலெக்ஸாண்ட்ரா, சில கார்பன் டை ஆக்சைடு கெட்ரேஜ்களை காட்டில் வீசியதை கண்டதாக கூறி இருக்கிறனர். இதனை அடுத்து நடிகர்கள் அவரை காட்டு தீயை வேண்டுமென்றே ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அழைத்து சென்றனர். வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை, சந்தேகப்படும் படியான செயல்களில் ஈடுபடவில்லை, தாகத்தை தீர்த்து கொள்ள தான் செய்த தீப்பற்ற வைக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. எனவே நான் இந்த காட்டு தீக்கு கரணம் இல்லை என்று அலெக்ஸாண்ட்ரா தொடர்ந்து கூறி வருகிறார். இவர் மீதான குற்றசாட்டு உறுதியானால் 9 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: California, Trending

அடுத்த செய்தி