முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Cheese கழிவுகளில் இருந்து Vodka தயாரிக்கும் மது ஆலை.!

Cheese கழிவுகளில் இருந்து Vodka தயாரிக்கும் மது ஆலை.!

Cheese

Cheese

Vodka | சீஸ் தயாரிக்கும் பணியின்போது உறைந்து போகும் பாலில் எஞ்சியிருக்கும் திரவ படிமத்தை எடுத்து மது தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். உலகெங்கிலும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் டன் அளவுக்கு சீஸ் தயாரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் துறை தெரிவிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உணவை வீணடிக்காமல் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தி கொள்வதற்கான யோசனைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அப்படியொரு சிந்தனையின் அடிப்படையில் சீஸ் (பாலாடைக்கட்டி) தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுகளைக் கொண்டு கிக்கான மது தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற ஒன்றை நீங்கள் எங்காவது கேள்விபட்டது உண்டு? இது சாத்தியமா? இதையெல்லாம் தெரிந்து கொள்ள இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

சீஸ் தயாரிக்கும் பணியின்போது உறைந்து போகும் பாலில் எஞ்சியிருக்கும் திரவ படிமத்தை எடுத்து மது தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றனர். உலகெங்கிலும் ஆண்டுதோறும் 20 ஆயிரம் டன் அளவுக்கு சீஸ் தயாரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த வேளாண் துறை தெரிவிக்கிறது.

பொதுவாக சீஸ் தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படும் 90 சதவீத பால் என்பது நீர் மோர்-ஆக மாற்றம் செய்யப்படுகிறது என்று கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கும் அந்த மோர் கழிவுகளை நிலத்தில் வெளியேற்றினால் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மோர் கழிவை கொண்டு புரதத்திற்கான பவுடர்கள் மற்றும் இதர ஊட்டச்சத்து பொருட்களை தயாரிப்பதற்கான இயந்திர வசதிகள் ஒருசில பெரிய நிறுவனங்களிடம் மட்டுமே உள்ளன. விலை உயர்ந்த இந்த இயந்திரங்களை சின்னஞ்சிறு நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துவது சாத்தியமற்றது எனக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, பால் சார்ந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுப் பொருட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான புத்தம்புது யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த மது ஆலை ஒன்று சீஸ் கழிவுகளில் இருந்து வோட்கா தயாரித்து வருகிறது. கழிவு மோரில் உள்ள லேக்டோஸ் சர்க்கரையை, நொதிக்க வைத்து பின்னர் மதுவாக மாற்றப்படுகிறது.

Also Read : ஆன்லைனில் Wine ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

சீஸ் தயாரிக்கும்போது உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான எளிமையான வழிமுறை இதுவாகும். அதே சமயம், கழிவு மோரில் ஏற்கனவே நிறைய நீர்ச்சத்து இருப்பதால், மது தயாரிக்கும்போது அதிக தண்ணீர் பயன்படுத்தப்படுவது இல்லை. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் மட்டுமல்ல. உலகின் வேறுபல பகுதிகளில் உள்ள நிறுவனங்களும் இத்தகைய உத்திகளை கையாளுகின்றன. குறிப்பாக டியூஃபோர் என்ற நிறுவனத்தின் சார்பில் ஜின், வோட்கா போன்றவை சீஸ் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

Also Read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள்

அதே சமயம், ஒரு சில நிறுவனங்கள் இந்த கழிவு மோரைக் கொண்டு மற்றொரு வகையான சீஸ்-களை தயாரிக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘டகாமகா’ என்னும் சீஸ் தயாரிப்பு நிறுவனமானது, ஆட்டுப் பாலில் இருந்து சீஸ் தயாரித்து வருகிறது. அதில் இருந்து வரும் கழிவுகளை கொண்டு ரிகோட்டா என்னும் சீஸ் தயாரிக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொள்கிறது.

First published:

Tags: Cheese