ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கனிவாக பேசினால் டிஸ்கவுண்ட்.. அதட்டினால் டபுள் சார்ஜ் - இங்கிலாந்து கஃபேயின் அட்டகாசமான விதி!

கனிவாக பேசினால் டிஸ்கவுண்ட்.. அதட்டினால் டபுள் சார்ஜ் - இங்கிலாந்து கஃபேயின் அட்டகாசமான விதி!

வாடிக்கையாளர்கள் எவ்வளவு மரியாதையுடன் ஆர்டர் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஒரே பானத்திற்கு வித்தியாசமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஹுசைன் கூறியுள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இங்கிலாந்தில் வாடிக்கையாளர்கள் யாரிடமும் எந்த விதத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புதிய பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர்.

  இங்கிலாந்தின் பிரெஸ்ட்டானில் இல் உள்ள சாய் ஸ்டாப் என்ற கஃபேயில், வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ள செய்வதற்காக இந்தப் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு தங்கள் ஆர்டர்களை வழங்கும் நபர்களிடம் கருணையுடன் இருக்க ஊக்குவிப்பதாகும்.

  29 வயதான உஸ்மான் ஹுசைனால் தொடங்கப்பட்ட சாய் ஸ்டாப், மக்கள் தங்கள் ஆர்டர்களைக் கேட்கவும், ஆர்டர்களை கொண்டு வந்து தருபவரிடமும் கனிவாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்காக கனிவுடன் கேட்பவர்களுக்கு குறைந்த விலையும், அதட்டி கேட்பவர்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறுகிறது.

  வறுமையில் சிக்கி தவிக்கும் 130 கோடி மக்கள் - வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் இன்று!

  வாடிக்கையாளர்கள் எவ்வளவு மரியாதையுடன் ஆர்டர் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஒரே பானத்திற்கு வித்தியாசமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஹுசைன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மெனு போர்டிலேயே அதை குறிப்பிட்டும் வைத்துள்ளார்.

  உஸ்மான் ஹுசைன் இது குறித்து கூறும்போது ‘இந்த விதி மக்களை கனிவான பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரு நினைவூட்டல் மட்டுமே.நீங்கள் எங்கள் வீட்டில் வரவேற்கும் விருந்தினராக இருக்கிறீர்கள். அந்த மரியாதையை பரிமாறிக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

  இனி ATM இயந்திரத்திலேயே சட்னியுடன் இட்லி கிடைக்கும்... எந்த ஊரில் தெரியுமா?

  நாங்கள் முரட்டுத்தனமான வாடிக்கையாளர்களுடன் ஒருபோதும் போராடியதில்லை. ஆனால் இந்த விதியால் வாடிக்கையாளர்கள் எங்களுடன் மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும் உரையாடுகிறார்கள். இந்த மாற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்களோடு இயைந்து நடக்கும் இந்த வணிகம் தான் என்னை உயர்த்தும் என்று நம்புகிறேன் என்றார்.

  அமெரிக்க ஓட்டல் ஒன்றின் முகநூல் பதிவைப் பார்த்ததும் தனக்கு இந்த யோசனை வந்ததாக உஸ்மான் தெரிவித்தார். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த அந்த படத்தை சேமித்து, தற்போது சாய் ஸ்டாப்பில் சோதனை செய்துள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: UK