தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது தொழிலின் வெற்றியைத் தாண்டி தனது ட்விட்டர் பதிவுகளால் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்று வருகிறார். அவரது ஊக்கமளிக்கும் மற்றும் நகைச்சுவையான ட்வீட்டுகளை பார்ப்பதற்காகவே அவரை 1 கோடி பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.
பல புதிய முன்னெடுப்புகள், இளைய சமூகத்தின் தொழில் முயற்சிகள், கேளிக்கை வீடியோக்களை, சமூக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய ட்வீட்டை வெளியிட்டுள்ளார். இன்றைய சமூக நிலை சந்திக்க இருக்கும் ஆபத்தைக் காட்டும் ஒரு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்வீட் நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதில் ஸ்மார்ட்போனுக்கு அடிமையான சமூகம் வயதாகி காப்பகத்தில் உள்ளது. அதில் முதியவர்கள் எல்லாம் கூனி குறுகி கைகள் ஏந்தியபடியே இருக்கின்றனர்.
இதையும் படிங்க : மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்!
மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., வீடியோ என பதிவிட்டு, பார்த்து குனிந்தே இருக்கும் இன்றைய சமூகம் வயதானாலும் அதே போன்ற கை அமைப்பு கொண்டு தங்கிவிடும். கூன் விழுந்த நடையோடு உடல் முன்னோக்கி வளைந்து காணப்படும் காட்சியை பகிர்ந்துள்ளார்.
That’s a seriously depressing cartoon. But it’s made me decide to put down the phone (after tweeting this!) and ensure that my Sunday is spent with my neck straight and my head up… pic.twitter.com/seEdiAhQAC
— anand mahindra (@anandmahindra) November 27, 2022
இது மனச் சோர்வை ஏற்படுத்துகிறது என வேதனை தெரிவித்து உள்ள அவர், இந்த ட்விட்டை பதிவிட்ட பின்னர் தனது மொபைல் போனை தூர வைத்து விட்டேன் என கூறியுள்ளார். அதோடு இந்த ஞாயிற்றுக்கிழமை எனது போனை பயன்படுத்தாமல் கழுத்து நேராக இருக்கும்படியும் மற்றும் தலை மேல்நோக்கி நிமிர்ந்து இருக்கும்படியும் பார்த்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மொபைல் போனுக்கு அடிமையான பின்னர் அதன், உடல் சார்ந்த, நீண்டகால கடுமையான விளைவுகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த பதிவை அவர் வெளியிட்டு உள்ளது பலரையும் ஈர்த்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anand Mahindra, Tweet, Twitter