ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காக்கா முட்டை படம் போல ரியல் சம்பவம்.. இணையத்தில் வைரலான 10 ரூபாய் பர்கர் சிறுமி!

காக்கா முட்டை படம் போல ரியல் சம்பவம்.. இணையத்தில் வைரலான 10 ரூபாய் பர்கர் சிறுமி!

10 ரூபாயுடன் பர்கர் வாங்க சென்ற சிறுமி

10 ரூபாயுடன் பர்கர் வாங்க சென்ற சிறுமி

தனது சொந்த செலவில் மனிதநேயத்தின் அடிப்படையில் அச்சிறுமிக்கு உணவு வாங்கிக் கொடுத்த தீரஜின், மனித நேயத்தை பாராட்டி அவருக்கு தலைவணங்குகிறோம்” என்று அப்பதிவில் இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பர்கர் கிங் நிறுவனத்தின் கிளை மேலாளராக இருக்கும் ஒருவர், ஏழை சிறுமி ஒருவருக்கு தனது சொந்த காசில் பர்கர் வாங்கிக் கொடுத்த சம்பவம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அவரின் இந்த நல்ல மனதை பாராட்டி பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

  கேஎஃப்சி, டாமினோஸ், பர்கர் கிங் போன்ற உணவகங்களில் சென்று உணவருந்த வேண்டும் என்பது பொருளாதாரத்தின் பின் தங்கிய சிலருக்கு கனவாகவே இருந்து வருகிறது. எப்படியாவது அங்கு சென்று மற்றவர்களைப் போலவே நாமும் அந்த உணவை ருசிக்க வேண்டும் என்று பல சிறுவர் சிறுமிகளுக்கு இன்னும் அந்த ஆவல் இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதுபோல ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.

  இந்த சம்பவத்தை ஆதித்யா குமார் என்று ட்விட்டர் யூசர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் அந்த உணவகத்தின் கவுண்டரின் பக்கத்தில் சிறுமி ஒருவர் வெறும் கால்களுடன் தனது ஆர்டருக்கு காத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

  Read More : ஒரு கேக் துண்டு 27,000 ரூபாய்.. 41 ஆண்டு பழைய கேக்கில் அப்படி என்ன இருக்கு? இதுதான் விவரம்!

  நொய்டாவில் உள்ள “பொட்டனிக்கள் கார்டன் மெட்ரோ ஸ்டேஷனில்” உள்ள பர்கர் கிங் உணவகத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற உணவகங்களில் கிடைக்கும் உணவு பொருட்களின் விலையானது வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால்அந்த உணவகத்திற்கு சென்ற சிறுமி தனது கையில் பத்து ரூபாயை மட்டும் தான் வைத்திருந்தார்.

  அந்த சிறுமி வாங்க விரும்பிய பர்கரின் விலை ரூபாய் 90 ஆகும். அச்சிறுமிக்கு பின் நின்ற ஒரு மனிதர் இந்த நிலைமையை கவனித்து இருக்கிறார். அதன் பிறகு, அவர் செய்த செயல் தான் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அச்சிறுமிக்கு தனது செலவிலேயே, பர்கரை வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். இதில் இன்னும் சிறப்பான விஷயம் ஒன்று உள்ளது. அவர் இவ்வாறு உணவை வாங்கி கொடுத்த அந்த நாள், உலக உணவு தினமாக கொண்டாடப்படும் அக்டோபர் 16 ஆகும்.

  அச்சிறுமிக்கு உணவை பரிசளித்த அந்த நபர் வேறு யாருமல்ல. அந்த உணவகத்தின் மேலாளர் தான் என்று தெரியவந்துள்ளது. உலக உணவு தினத்தை இதைவிட யாராலும் சிறப்பாக கொண்டாடி விட முடியாது. மேலும் அவரின் இந்த செயலை பாராட்டி பலர் வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் கூறி வருகின்றனர். மேலும் தீரஜின் இந்த செயலானது பலரையும் கவர்ந்தது மட்டுமின்றி மற்றவரோடு உணவை பகிர்ந்து உண்பதற்கு ஊக்கப்படுத்தி உள்ளதாகவும் பலர் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  அந்த மேலாளரை கௌரவிக்க விரும்பிய பர்கர் கிங் நிறுவனம், அவருக்காக ஒரு பாராட்டு விழாவை ஏற்படுத்தி அவருக்கு மரியாதை செய்தது.. அந்த விழாவின் புகைப்படத்தை நம் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

  அந்தப் பதிவில், “ எங்கள் உணவகத்தின் நொய்டா பாட்டனிக்கள் கார்டன் மெட்ரோ ஸ்டேஷன், கிளை மேலாளர் ஆன தீரஜ் குமாரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அவருடைய இந்த அழகிய கருணைமிக்க செயலுக்கும் அன்பான உள்ளத்திற்கும் எங்களது பாராட்டை தெரிவித்துக் கொள்ளும் வகையில் இந்த விழாவை நடத்தி அவரை சிறப்பித்துள்ளோம். மேலும் பத்து ரூபாயுடன் எங்கள் உணவகத்திற்கு வந்த அந்த சிறுமியையே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளோம்”.

  “தனது சொந்த செலவில் மனிதநேயத்தின் அடிப்படையில் அச்சிறுமிக்கு உணவு வாங்கிக் கொடுத்த தீரஜின், மனித நேயத்தை பாராட்டி அவருக்கு தலைவணங்குகிறோம்” என்றும் அப்பதிவில் தெரிவித்துள்ளனர்.”

  “மேலும் தீபக் யாதவ் என்ற, வடக்கு பகுதியின் செயல் தலைவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தீரஜின் தூய மனிதநேயத்தையும் அவரது சுத்தமான உள்ளத்தையும் பாராட்டியுள்ளார். பர்கர் கிங் நிறுவனத்தின் உள்ள அனைத்து தனி மனிதர்கள் மற்றும் அணியினர் அனைவருக்கும் எங்களது நன்றிகள்” என அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral