பதவி, ஊதிய உயர்வு போன்ற காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை நிறுவனம் மாறக்கூட ஊழியர்கள் தயாராக இருக்கும் இந்த காலக்கட்டத்தில், ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை பார்ப்பது என்பதே குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. அதேபோல் சில நிறுவனங்கள் மட்டுமே தங்களது ஊழியர்களின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் மற்றும் சன்மானத்தை கொடுக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களிடம் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை கண்டுகொள்வதோ, பாராட்டுவதோ கிடையாது. உண்மையான உழைக்கும் ஊழியரை நிறுவனம் அங்கீகரிக்காவிட்டாலும், அவருக்கான சன்மானம் எப்படியும் வந்து சேரும் என்பதை இணையத்தில் வைரலாகி வரும் ஒரு சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.
அதாவது பர்கர் கிங்கில் ஒரு நபர் 27 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?, ஆம், அந்த நபரின் பெயர் கெவின் போர்ட். இவரது கடின உழைப்பை பாராட்டி பர்கர் கிங் நிறுவனம் திரைப்பட டிக்கெட், ஸ்டார்பக்ஸ் சிப்பர், மற்றும் சில சாக்லேட் என கிப்ட்களை கொடுத்து அசத்தியுள்ளது. ஆனால் அவரது உழைப்பிற்கான சரியான பரிசை ஒரு ஃபண்ட்ரைஸ் செய்யும் இணையதளம் கொடுத்துள்ளது.
இதனிடையே கெவின் போர்ட்டின் மகளான செரினா 'கோ ஃபண்ட் மீ' என்ற பக்கத்தில் தனது தந்தை குடும்பத்திற்காக, குழந்தைகளின் வளர்ச்சிக்காக 27 வருடங்களாக வேலைக்கு ஒரு நாள் கூட லீவ் போடாமல் உழைத்து வருகிறார் என குறிப்பிட்டு ஒரு டொனேஷன் போஸ்ட் பதிவிட்டிந்தார்.
also read : பீட்சா திருடிய மாணவர்களுக்கு உலக புகழ்பெற்ற சமையற்கலைஞர் கொடுத்த தண்டனை.!
54 வயதான கெவின்ஃபோர்ட் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இடைவிடாமல் கடினமாக உழைப்பு செலுத்திய விஷயம், சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தது. பல இணையதளவாசிகள் கெவின் அவருக்கு நிறுவனம் கொடுத்த பரிசுகளை விட உயர்வான பரிசுக்கு தகுதியானவர் என்று நினைத்தனர். எனவே பலரும் அந்த இணையதளம் மூலமாக கெவினுக்கு நிதி அளிக்க முன்வந்தனர். அப்படி சேர்ந்த நிதியின் மூலமாக கெவின் போர்ட்டிற்கு 2 லட்ச அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.1.57 கோடி ஆகும்.
தற்போது கெவின் இணையதளத்தில் மட்டுமல்ல தொலைக்காட்சிகள் பலவற்றாலும் பேட்டி எடுக்கப்பட்டு வருகிறார். இதனால் உள்ளூர் பிரபலமாகவே மாறிவிட்டார். ஒரு நிறுவனம் எப்போதும் தங்களுக்காக உண்மையாக உழைக்கும் ஊழியர்களை சினிமா டிக்கெட், போனஸ், சாக்லெட், மலர் கொத்து கொடுத்து பாராட்டுவது வழக்கம் தான் என்றாலும், 27 ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்த ஒரு நபருக்கு இணையவாசிகள் உதவிக்கரம் நீட்டி வழங்கிய நன்கொடை பாராட்டுக்களை குவித்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் சோசியல் மீடியாவிலும், ஊடகங்களிலும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.